உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை

பெண் வேட்பாளர் மானபங்கம்; பாஜகவுக்கு தலைவர்கள் கண்டனம்

புது­டெல்லி: உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லத்­தில் உள்­ளாட்சித் தேர்­தல் நடை­பெற உள்­ளது. நேற்று முன்­தி­னம் மனு தாக்­கல்­ முடிந்து உள்­ளது. இந்த நிலை­யில் அம்­மா­நி­லத்­தின் பல இடங்­களில் தேர்­தல் வன்­முறை வெடித்­துள்­ளது.

லக்­னோ­வி­லி­ருந்து 130 கி.மீ தூரத்­தில் உள்ள லக்­கிம்­பூர் கெரி­யில் நடந்த மோதல் சம்­ப­வத்­தில் சமாஜ்­வாடி கட்­சி­யைச் சேர்ந்த பெண் ஒரு­வர் மான­பங்­கப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளார். அந்­தக் காணொளி சமூக ஊட­கங்­களில் வெளி­யாகி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

நேற்று முன்­தி­னம் அம்­மா­நி­லத்­தின் 825 தொகுதி உள்­ளூர் பஞ்­சா­யத்­துத் தலை­வர் தேர்­தல்­க­ளுக்கு வேட்­பு­ம­னுக்­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டன. இதைத் தொடர்ந்து அங்கு பன்­னி­ரண்­டுக்கு மேற்­பட்ட இடங்­களில் வன்­முறை வெடித்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அந்­தப் பெண் பஞ்­சா­யத்துத் தேர்­த­லில் போட்­டி­யிட வேட்­மனுத் தாக்­கல் செய்ய வந்து உள்­ளார். அவர் மற்­றொரு கட்சி வேட்­பா­ளர் மற்­றும் அவ­ரது ஆட்­க­ளால் தாக்­கப்­பட்டு உள்­ளார். அவர்­கள் அந்­தப் பெண்ணை வேட்பு மனுத் தாக்­கல் செய்­ய­வி­டா­மல் தடுத்­த­னர். அவர்­க­ளைச் சமா­ளித்து வேட்­பு­மனுத் தாக்­கல் செய்­யப்­போன அந்­தப் பெண்­ணின் சேலையை உருவி அவர்கள் மான­பங்­கப்­ப­டுத்­தி­னர்.

இது­கு­றித்து சமாஜ்­வாடி கட்­சித் தலை­வர் அகி­லேஷ் யாதவ் வெளி­யிட்டு உள்ள டுவிட்­டில் தாக்­கி­ய­வர்­கள் பா.ஜ.க தொண்­டர்­கள் என்­றும் முதல் அமைச்­சர் யோகி ஆதித்­ய­நாத்­தின் பதவி ஆசை கொண்ட குண்­டர்­கள்­தான் இந்த வேலை­யைச் செய்­துள்­ள­னர் என­வும் கூறி உள்­ளார்.

காங்­கி­ரஸ் தலை­வர் பிரி­யங்கா காந்தி வதே­ரா­வும் இந்த வன்­முறைச் சம்­ப­வத்­தைக் காட்­டும் காணொ­ளியை பிர­த­மர் நரேந்­திர மோடி மற்­றும் யோகி ஆதித்­ய­நாத் ஆகி­யோ­ருக்கு டேக் செய்து வெடி­குண்­டு­கள், கற்­கள் மற்­றும் தோட்­டாக்­க­ளைப் பயன்­ப­டுத்­திய உ.பி.யில் உள்ள உங்­கள் கட்சித் தொண்­டர்­க­ளுக்கு வாழ்த்­துக்­கள், அவர்­கள் வேட்பு மனுக்­க­ளைப் பறித்து செய்­தி­யா­ளர்­களை அடித்து, உதைத்து பெண்­க­ளி­டம் தவ­றாக நடந்­து­கொண்­ட­னர். சட்­டம் ஒழுங்கு சீர்­கெட்டு ஜன­நா­ய­கம் சீர்­கு­லைந்து வரு­கிறது என்று பிரி­யங்கா காந்தி தனது டுவீட் பதி­வில் கூறி­யுள்­ளார்.

இது­கு­றித்து உத்­த­ர­ப்பி­ர­தேச போலிஸ் அதி­காரி பிர­சாந்த் குமார் கூறி­ய­தா­வது, "வேட்­பு­மனுத் தாக்­கல் செய்ய பாது­காப்பு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்டு இருந்­தன. ஆனால், பதி­னான்கு பகு­தி­களில் வன்­மு­றை­கள் நடந்­துள்­ள­தா­கப் பதி­வா­கி­யுள்­ளது. இந்த வன்­மு­றை­யில் ஈடு­பட்­ட­வர்­கள் மீது கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என கூறி­னார்.

அடுத்த ஆண்டு உத்­த­ர­ப்பி­ர­தே­சத்­தில் நடை­பெ­றும் சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்கு முன்­ன­தாக, உள்­ளாட்­சித் தேர்­தல் நடை­பெற்று வரு­கிறது.

நடந்து முடிந்த பஞ்­சா­யத்­துத் தேர்­த­லில் பா.ஜ.க. 75 இடங்­களில் 67 இடங்­களை வென்­றது. சமாஜ்­வாடி கட்சி ஐந்து இடங்­களை மட்­டுமே வென்­றது. ராஷ்­டி­ரிய லோக் தளம், ஜான்­சத்தா தளம் மற்­றும் ஒரு சுயேச்சை வேட்­பா­ளர் தலா ஒரு இடத்தை வென்­ற­னர். மாயா­வ­தி­யின் பகு­ஜன் சமாஜ் கட்சி தேர்­த­லில் போட்­டி­யி­ட­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!