37 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

புது­டெல்லி: இந்­தி­யா­வில் வியாழக்கிழமை இரவு 7 மணி நில­வ­ரப்­படி கிட்­டத்­தட்ட 37 கோடி (36,85,76,352) பேருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. ஜூன் 21-ல் இருந்து அனை­வ­ருக்­கும் தடுப்­பு­ம­ருந்து வழங்­கும் நட­வ­டிக்கையை இந்­தியா தொடங்­கி­யது முதல் 37 மாநி­லங்­கள்/யூனி­யன் பிர­தே­சங்­களில் இருக்­கும் 10,82,14,937 பேர் முதல் தடுப்­பூ­சி­யை­யும் 33,70,920 பேர் இரண்­டாம் தடுப்­பூ­சி­யை­யும் மூன்­றாம் கட்ட தடுப்­பூசி போடும் பணி தொடங்­கி­ய­தில் இருந்து இது­வரை பெற்­றுள்­ள­னர். உத்­த­ரப் பிர­தே­சம், மத்­தி­யப் பிர­தே­சம், ராஜஸ்­தான், தமிழ்­நாடு, பீகார், குஜ­ராத், கர்­நா­டகா மற்­றும் மகா­ராஷ்­டிரா உள்­ளிட்ட எட்டு மாநி­லங்­கள் 18-44 வயது பிரி­வி­ன­ருக்கு 50 லட்­சத்­திற்­கும் அதி­க­மான தடுப்­பூ­சி­களை வழங்­கி­யுள்­ளன. ஆந்­திரா, அசாம், சத்­தீஸ்­கர், டெல்லி, அரி­யானா, ஜார்க்­கண்ட், கேரளா, தெலுங்­கானா, இமாச்­ச­லப் பிர­தே­சம், ஒடிசா, பஞ்­சாப், உத்­த­ர­கண்ட் மற்­றும் மேற்கு வங்­கம் ஆகிய மாநி­லங்­களில் 18-44 வயது பிரி­வில் உள்ள 10 லட்­சத்­திற்­கும் அதி­க­மா­னோ­ருக்கு முதல் தடுப்­பூசி செலுத்­தப்­பட்­டுள்­ளது. தமி­ழ­கத்­தில் 6,145,252 பேர் முதல் தடுப்­பூ­சி­யை­யும், 183,152 பேர் இரண்­டாம் தடுப்­பூ­சி­யை­யும் போட்­டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!