உளவுத்துறை எச்சரிக்கை: காஷ்மீரில் வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்

ஸ்ரீந­கர்: காஷ்­மீ­ரில் வெளி­நாட்டுப் பயங்­க­ர­வா­தி­கள் ஊடு­ரு­வல் அதி­க­ரித்­துள்­ள­தாக இந்­திய உளவு அமைப்­பு­கள் தெரி­வித்­துள்­ளன. இது தொடர்­பாக மத்­திய அர­சுக்கு அந்த அமைப்­பு­கள் விரி­வான அறிக்கை அளித்­துள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

பாரா­முல்லா, பந்­தி­போரா, குப்­போரா உள்­ளிட்ட மாவட்­டங்­களில் தீவி­ர­வா­தி­க­ளின் நட­மாட்­டம் அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் ஆப்­கா­னிஸ்­தான் சிறை­களில் அடைக்­கப்­பட்­டி­ருந்த ஏரா­ள­மான பயங்­க­ர­வா­தி­களை தலி­பான்­கள் விடு­வித்­ததை அடுத்து இந்­திய எல்­லை­யில் ஊடு­ரு­வும் முயற்­சி­கள் அதி­க­ரிக்­கும் என்­றும் உள­வுத்­துறை தெரி­வித்­துள்­ள­தாக ஊட­கச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

உள்­நாட்­டில் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்ள பயங்­க­ர­வா­தி­க­ளை­விட வெளி­நாட்டு பயங்­க­ர­வா­தி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மாக இருக்­கும் என உள­வுத்­துறை அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்­றும் ஜம்மு காஷ்­மீ­ரில் சுமார் ஐம்­பது வெளி­நாட்டுப் பயங்­க­ர­வா­தி­கள் பதுங்கி உள்­ள­னர் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

கடந்த பத்து ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு இப்­போது வடக்கு காஷ்­மீ­ரில் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­கள் அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் உள­வுத்­துறை சுட்­டிக்­காட்டி உள்­ளதை அடுத்து எல்­லை­யோ­ரப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.

இதற்­கி­டையே காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல்­காந்தி எதிர்­வ­ரும் 9ஆம் தேதி காஷ்­மீ­ருக்­குப் பய­ணம் மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்­ளார். தமது இரண்டு நாள் பய­ணத்­தின் போது அவர் வைஷ்­ணவி தேவி கோவி­லுக்­குச் சென்று சாமி தரி­ச­னம் செய்­வார் என்­றும் அங்­குள்ள காங்­கி­ரஸ் கட்சி நிர்­வா­கி­க­ளு­டன் ஆலோ­சனை நடத்த இருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

கடந்த மாதம் 10ஆம் தேதி­யும் காஷ்­மீ­ருக்கு சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டார் ராகுல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!