உயிர்வாயு தயாரிப்பு தீவிரம்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் இன்­னும் பத்து நாள்­களில் மூன்­றாம் கிரு­மிப் பர­வல் அலை பர­வத் தொடங்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்த முறை கிரு­மிப் பர­வ­லின் தாக்­கம் எந்த அள­வுக்கு இருக்­கும் என சரி­யாகக் கணிக்க இய­லா­த­போ­தி­லும் நிலைமை மோச­மா­கக் கூடும் என நிபு­ணர்­கள் எச்­ச­ரித்து உள்­ள­னர். அத­னால் இதற்கு முன்­னர் ஏற்­பட்­ட­தைப் போல் இல்­லா­மல் நிலை­மை­யைச் சமா­ளிப்­ப­தற்­கான முன்­னேற்­பா­டு­களில் அர­சாங்­கம் தீவி­ர­மாக இறங்கி உள்­ள­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் தெரி­வித்து உள்­ளது.

இரண்­டாம் கட்ட கிரு­மிப் பர­வல் கடந்த ஏப்­ரல், மே மாதங்­களில் உச்­சத்­தில் இருந்­த­போது போது­மான உயிர்­வாயு கிடைக்­கா­மல் ஏரா­ள­மா­னோர் உயி­ரி­ழக்­கும் நிலை ஏற்­பட்­டது. குறிப்­பாக, தலை­ந­கர் டெல்லி ஆக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டது. அங்­குள்ள ஸ்ரீகங்கா ராம் மருத்­து­வ­ம­னை­யில் உயிர்­வாயு பற்­றாக்­குறை கார­ண­மாக பலர் மாண்­ட­னர். கங்கை நதி­யில் ஏரா­ள­மான சட­லங்­கள் வீசப்­பட்­ட­தாக அப்­போது செய்­தி­கள் வெளி­வந்­தன.

இருப்­பி­னும் இனி இது­போல நடக்­கா­மல் இருக்க ஏரா­ள­மான முன்­னேற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அச்­செய்தி கூறி­யது. மோச­மான சம்­ப­வங்­க­ளி­லி­ருந்து பாடம் கற்­றுக் கொண்­டதை தற்­போ­தைய ஏற்­பா­டு­கள் உணர்த்­து­வ­தா­க­வும் அது தெரி­வித்­தது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை இந்த மருத்­து­வ­ம­னைக்­கும் பிற மருத்­து­வ­ம­னைக்­கும் சென்ற ராய்ட்­டர்ஸ் செய்­தி­யா­ளர் தேவை­யான உயிர்­வாயு இருப்பு வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தைக் கண்­ட­தா­கக் கூறி­னார். கங்கா ராம் மருத்­து­வ­ம­னை­யின் உயிர்­வாயு இருப்பு 50% உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

மேலும் நாடு முழு­வ­தும் எழும் தேவை­யைச் சமா­ளிக்க உயிர்­வாயு உற்­பத்தி தீவி­ர­மாக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக ஏரா­ள­மான எரி­வாயு உற்­பத்தி நிறு­வ­னங்­கள் அர­சாங்­கத்­து­டன் இணைந்து பணி­யாற்றி வரு­கின்­றன.

நாள் ஒன்­றுக்கு 15 ஆயி­ரம் டன் உயிர்­வாயு தயா­ரிக்க இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இப்­போ­தி­ருந்தே உற்­பத்­திப் பணி­களை வேகப்படுத்தினால்தான் இலக்கை எட்ட முடி­யும் என மருத்­துவ விஞ்­ஞா­னி­கள் கூறி­யுள்­ள­னர். 'லிண்டே இந்­தியா' நிறு­வ­னம் மூன்­றில் ஒரு பங்கு உயிர்­வாயு தயா­ரிக்க மத்­திய அர­சு­டன் ஒப்­பந்­தம் செய்துள்­ளது.

இன்னும் பத்து நாள்களில் மூன்றாம் கட்ட கிருமிப் பரவல் ஏற்படும் என கணிப்பு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!