மம்தாவை தோற்கடிக்க பாஜக, காங்கிரஸ் போட்டி

கோல்­கத்தா: மேற்கு வங்­கா­ளத்­தில் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் ஆட்­சி­யைப் பிடித்­தா­லும் சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் அக்­கட்­சி­யின் தலை­வர் மம்தா பானர்ஜி தோல்­வி­ய­டைந்­தார். திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சி­யி­லி­ருந்து பாஜ­க­வுக்­குத் தாவி நந்­தி­கி­ராம் தொகு­தி­யில் போட்­டி­யிட்ட சுவேந்து அதி­காரி, 50, அவ­ரைத் தோற்­க­டித்­தார்.

தோற்­றா­லும், முதல்­வர் பத­வியை ஏற்­றுக்­கொண்ட மம்தா, நவம்­பர் ஐந்­தாம் தேதிக்­குள் இடைத்­தேர்­த­லில் வெற்­றி­பெற்­றாக வேண்­டிய கட்­டா­யத்­தில் உள்­ளார்.

இந்­நி­லை­யில் இந்­தி­யத் தேர்­தல் ஆணை­யம் மேற்கு வங்­கத்­தின் சம்­சர்­கஞ்ச், ஜாங்­கி­பூர், பபா­னி­பூர் ஆகிய சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்கு இடைத்­தேர்­தலை அறி­வித்­துள்­ளது. இதில் பபா­னி­பூர் தொகுதியில் மம்தா போட்­டி­யி­டு­கி­றார். நம்­பிக்­கை­யில் மம்தா உள்­ளார்.

ஆனால், நந்­தி­கி­ராம் தொகு­தி­யில் கொடுத்த அதே நெருக்­க­டி­யைத் தர பாஜக தயா­ராகி வரு­கிறது. இந்தத் தொ­கு­தி­யி­லும் சுவேந்து அதி­கா­ரி­யையே கள­மி­றக்­க­லாம் என தெரி­விக்­கப்­பட்ட யோச­னை­களை பாஜக புறக்­க­ணித்­து­விட்­டது. இது குறித்து நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய மாநில பாஜக தலை­வர் திலிப் கோஷ், "மம்தா ஏன் ஒரு­வ­ரி­டமே தோற்க வேண்­டும். இம்­முறை வேறொரு வேட்­பா­ளர் அவ­ரைத் தோற்­க­டிப்­பார்," என்று கூறி­னார்.

மம்­தா­வைத் தோற்­க­டிக்­கக் கூடிய பலம்­பொ­ருந்­திய ஒரு­வரை பாஜக நிறுத்­தும் என்­றும் அவர் சொன்­னார்.

இதற்­கி­டையே, மம்­தா­வுக்கு எதி­ராக வேட்­பா­ளரை நிறுத்த வேண்­டாம் என முத­லில் கரு­திய காங்­கி­ரஸ் கட்­சி­யும் தற்­போது அந்த முடி­வி­லி­ருந்து மாறி போட்­டி­யிட முன் வந்­துள்­ளது.

இடது முன்­ன­ணி­யு­டன் ஆலோ­சனை செய்து விரை­வில் வேட்­பா­ளரை தமது கட்சி அறி­விக்­கும் என மாநில காங்­கி­ரஸ் தலை­வர் ஆதிர் ரஞ்­சன் சவுத்ரி தெரி­வித்­துள்­ளார். காங்­கி­ர­சு­டன் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் இணைந்து பாஜ­க­விற்கு எதி­ராக வலு­வான கூட்­ட­ணியை அமைக்க உள்ள நிலை­யில் மம்­தா­வுக்கு எதி­ராக காங்­கி­ரஸ் வேட்­பா­ளரை நிறுத்­து­வது தேசிய அள­வி­லான எதிர்க்­கட்­சி­க­ளின் கூட்­ட­ணி­யில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­துமா என கேள்வி எழுந்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!