துப்பாக்கிச்சூடு, குண்டு வீச்சு: ஒருவர் பலி

கோல்­கத்தா: மேற்­கு­வங்­கத்­தில் காலி­யாக உள்ள மூன்று சட்­ட­

மன்­றத் தொகு­தி­க­ளுக்கு வரு­கிற 30ஆம் தேதி இடைத்­தேர்­தல் நடை­பெ­றும் என தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­தது. பபா­னி­பூர் தொகு­தி­யில் முதல்­வர் மம்தா பானர்ஜி போட்­டி­யி­டு­கி­றார்.

இந்­நி­லை­யில், அம்­மா­நி­லத்­தின் புர்பா பிர­தா­மன் மாவட்­டம் அஷ்­கி­ராம் பகு­தி­யைச் சேர்ந்த திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் நிர்­வாகி சந்­ஷல் பக்‌ஷி, 40, செவ்­வாய் இரவு தனது தந்­தை­யு­டன் மோட்­டார் சைக்­கி­ளில் தமது வீட்­டிற்­குச் சென்­று­கொண்­டி­ருந்­தார். அப்­போது, அவ­ரைப் பின்தொடர்ந்து சென்ற ஒரு கும்­பல் சந்­ஷல் பக்‌ஷி மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்­தி­விட்டு தப்­பிச்­சென்­றது. இதில் சந்­ஷல் பக்‌ஷி சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார். அவரை பாஜ­க­வி­னர் திட்­ட­மிட்டு துப்­பாக்­கிச்­சூடு நடத்தி கொலை செய்­து­விட்­ட­தாக திரி­ணா­மூல் கட்சி கூறியது.

இச்­சம்­ப­வத்­தைத் தொடர்ந்து நேற்­றுக் காலை 6.30 மணி அள­வில் பாஜக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அர்­ஜுன் சிங் என்­ப­வர் வீட்­டின் மீது வெடி­குண்டு வீசப்­பட்­டது.

மூன்று வெடி­குண்­டு­கள் வீசப்­பட்­ட­தில் அவ­ரது வீட்­டின் இருப்­புக் கத­வு­கள் சேத­முற்­ற­தா­க­வும் யாருக்­கும் காய­மில்லை என்­றும் போலி­சார் கூறி­னர். சம்பவம் நடைபெற்றபோது அர்ஜுன் சிங் டெல்லியில் இருந்ததாகத் தெரி விக்கப்பட்டது. திரி­ணா­மூல் காங்­கி­ர­சைச் சேர்ந்­த­வர்­களே இந்­தத் தாக்­கு­தலை நடத்­தி­யி­ருக்­கக் கூடும் என்று மாநில பாஜக தலை­வர் திலிப் கோஷ் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!