இந்தியாவிேலயே ‘ஐஐடி மெட்ராஸ்’ சிறந்தது

புதுடெல்லி: இவ்வாண்டு கல்வி நிலையங்களின் தரவரிசை பட்டிய லில் சென்னையில் உள்ள 'ஐஐடி மெட்ராஸ்' தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தேசிய அளவில் முத லிடத்தை பிடித்துள்ளது.

இதேபோல் சிறந்த ஆய்வு நிறுவனங்களின் பட்டியலில் 'ஐஐடி மெட்ராஸ்' இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக 'நியூஸ்18 தமிழ்' இணையத் தளம் தெரிவித்தது.

இந்தியாவின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களின் வரிசையில் கோவை அமிர்தா 16வது இடத் தையும் NIT திருச்சி 9வது இடத் தையும் அண்ணா பல்கலைக்கழகம் 20வது இடத்தையும் பாரதியார் பல்கலைக்கழகம் 21வது இடத்தையும் பிடித்துள்ளன.

தலைசிறந்த கலை அறிவியல் கல்லூரிகளின் பட்டியலில் சென்னை யில் உள்ள லயோலா கல்லூரி 3வது இடத்தையும் கோவையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி 6வது இடத்தையும் சென்னையில் உள்ள பிரசிடென்சி கல்லூரி 7வது இடத்தையும் சென்னை எத்திராஜ் கல்லூரி 51வது இடத்தையும் சென்னை குயின் மேரிஸ் கல்லூரி 55வது இடத்தையும் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி 58வது இடத்தையும் கைப் பற்றியுள்ளன.

மருத்துவக் கல்லூரிகளில் தேசிய அளவில் வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

சிறந்த கல்லூரிக்கான பட்டியலில் ஐஎஸ்எஸ் பெங்களூரு 2வது இடத்தில் வந்து உள்ளது.

சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களின் பிரிவில் 'ஐஐஎம் அகமதாபாத்' முதல் இடத்தைப் பெற்றுள்ளது. 'ஐஐஎம் பெங்களூரு' இரண்டாம் இடத்திலும் 'கொல்கத்தா மூன்றாம் இடத்திலும் உள்ளன.

நாட்டின் சிறந்த கல்வி நிறு வனங்களின் பட்டியலை கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) பட்டியலை வெளியிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!