விதிமுறைகளை மீறும் மத்திய அரசு: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு செய்திக்கொத்து

ராகுல்: அஞ்சுகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரதமர் மோடி சீனாவைக் கண்டு அஞ்சுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 'காலவரிசையைப் புரிந்துகொள்ளுங்கள்' எனும் தலைப்பில் 54 வினாடிகள் கொண்ட காணொளிப்பதிவு ஒன்றை தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதில், கிழக்கு லடாக் பகுதியில் கடந்த சில மாதங்களாக நடந்த நிகழ்வுகள் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், 'மிஸ்டர் 56 அங்குலம் சீனாவைக் கண்டு அஞ்சுகிறார்' என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவுக்கு பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வான் மோதல்: சீனாவின் கருத்தை திட்டவட்டமாக நிராகரித்தது இந்தியா

புதுடெல்லி: கல்வான் பள்ளத்தாக்கு மோதல் தொடர்பான சீனாவின் கருத்துகளை நிராகரிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. எல்லைப் பகுதி தொடர்பான ஒப்பந்தங்களை இந்தியா மீறிவிட்டதாக சீனா கூறியிருப்பது தவறான தகவல் என்று இந்திய தரப்பு திட்டவட்டமாக கூறியுள்ளது. "கிழக்கு லடாக்கில் உள்ள அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த மோதல் விவகாரத்தில் எங்கள் நிலை தெளிவாகவும் நிலையாகவும் உள்ளது. "சீனா கோபமூட்டும் வகையில் நடந்து கொண்டதுடன், எல்லையில் நிலவும் இயல்பு நிலையையும் தன்னிச்சையாக மாற்ற முயன்றது. இதுவே மோதலுக்கு வித்திட்டது," என இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

2024ல் அனைத்து கிராமங்களுக்கும் மின்னிலக்க தொடர்பு வசதி

பெங்களூரு: எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்னிலக்க தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ்சிங் தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இக்குறிப்பிட்ட திட்டத்தை மத்திய அரசு தீவிரமாகச் செயல்படுத்தும் என்றார். கிராமப்புற வளர்ச்சிக்காக மத்திய அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குஜராத்தின் முதல் பெண் சபாநாயகர்

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவையின் முதல் பெண் சபாநாயகராக நிமாபென் ஆச்சாரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரு தரப்பின் ஆதரவுடன் அவர் போட்டியின்றித் தேர்வானார். குஜராத் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த ராஜேந்திர திரிவேதி, கடந்த 16ஆம் தேதி பதவி விலகியதை அடுத்து நிமாபென் ஆச்சாரியா தேர்வாகி உள்ளார். இதற்கிடையே, பதவி விலகிய ராஜேந்திர திரிவேதி மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் பயன்படுத்தக்கூடிய மெட்ரோ ரயில் அட்டை அறிமுகம்

புதுடெல்லி: நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பயன்படுத்தக் கூடிய பயண அட்டை சேவையை வழங்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த அட்டை மூலமாக மெட்ரோ ரயில்களில் மட்டுமல்லாமல் பேருந்துகளிலும் பயணம் செய்ய இயலும். மேலும் சுங்கச்சாவடி, வாகன நிறுத்துமிட கட்டணம், வங்கிப் பரிவா்த்தனைகள், சில்லறை வா்த்தகம் ஆகியவற்றுக் கும் பயன்படுத்தலாம். அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்த அட்டை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதற்கு முன்பு அனைத்துச் சேவைகளையும் வழங்குவதற்கான தொழில்நுட்பப் பணிகளும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துவங்காத கணக்கில் ரூ. 10 கோடி

பாட்னா: பீகாரைச் சேர்ந்த கூலி தொழிலாளியான விபின் சவுகானின் வங்கிக் கணக்கில் அவருக்குத் தெரியாமல் பத்து கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. அண்மையில் வங்கிக் கணக்கு தொடங்க அருகில் உள்ள வங்கிக்குச் சென்றபோது அவரது பெயரில் ஏற்கெனவே ஒரு கணக்கு இருப்பதும் அதில் தொகை இருப்பதும் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் போலிசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

புது­டெல்லி: மத்­திய அரசு தங்­க­ளுக்கு சாத­க­மாக செயல்­ப­டக்­கூ­டிய அதி­கா­ரி­க­ளுக்கு டெல்லி காவல்­து­றை­யில் முக்­கிய பொறுப்­பு­களை அளித்து வரு­வ­தாக ஆம் ஆத்மி கட்சி குற்­றம்­சாட்டி உள்­ளது.

எனவே டெல்லி உயர் நீதி­மன்­றம் இது­கு­றித்து விசா­ரணை நடத்த வேண்­டும் என்று அக்­கட்­சி­யின் முக்­கிய தலை­வர்­களில் ஒரு­வ­ரான பரத்­வாஜ் வலி­யு­றுத்தி உள்­ளார்.

டெல்­லி­யில் மிகப்­பெ­ரிய பாது­காப்பு குறை­பாடு ஏற்­பட்­டுள்­ள­தாக அவர் சாடி­னார்.

டெல்­லி­யில் உள்ள நீதி­மன்­றத்­தில் வைத்து, பல்­வேறு குற்ற வழக்­கு­களில் தொடர்­பு­டைய ஜிதேந்­தர் கோகி என்ற ரவு­டிக்­கும்­பல் தலை­வன் மர்­மக் கும்­ப­லைச் சேர்ந்­த­வர்­க­ளால் நேற்று முன்­தி­னம் சுட்­டுக் கொல்­லப்­பட்­டான். மேலும், அங்கு காவ­லில் இருந்த காவல்­து­றை­யி­னர் மீதும் துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்­டது.

போலி­சார் நடத்­திய பதில் தாக்­கு­த­லில் அக்­கும்­ப­லைச் சேர்ந்த மூன்று பேர் பலி­யா­கி­னர்.

இந்­தச் சம்­ப­வம் குறித்து விசா­ரணை நடந்து வரும் நிலை­யில், டெல்லி காவல்­து­றை­யில் தங்­க­ளுக்கு சாத­க­மாக உள்ள அதி­கா­ரி­களை முக்­கிய பொறுப்­பு­களில் நிய­மித்து அனைத்து விதி­மு­றை­க­ளை­யும் மத்­திய அரசு மீறி வரு­வ­தாக ஆம் ஆத்மி கூறி­யுள்­ளது.

இது­கு­றித்து உயர் நீதி­மன்­றம் கவ­னத்­தில் கொள்ள வேண்­டும் என்று அக்­கட்சி வலி­யு­றுத்தி உள்­ளது.

இந்­நி­லை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய பாஜக தலை­வர் நீல்­கண்ட் பக்‌ஷி, பதற்­றம் ஏற்­ப­டுத்­தும் சம்­ப­வங்­கள் நிக­ழும்­போது அனை­வ­ரும் சில கட்­டுப்­பா­டு­களை கடைப்­பி­டிக்க வேண்­டும் என்­றார்.

ஆனால் இது­போன்ற தரு­ணங்­க­ளில்­கூட ஆம் ஆத்மி அர­சி­யல் விளை­யாட்டை தவிர்க்­கா­மல் இருப்­பது சரி­யல்ல என்­றும் நீல்­கண்ட் பக்‌ஷி மேலும் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!