இந்திய எல்லையில் ஊடுருவல்; உயிரோடு பிடிபட்ட போராளி

புது­டெல்லி: இந்­திய எல்­லை­யில் பிடி­பட்ட பாகிஸ்­தான் போரா­ளி­யி­டம் விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.

அவ­ரது பெயர் அலி பாபர் பட்ரா என்­ப­தும் வயது 19 என்­ப­தும் முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரிய வரு­கிறது.

உரி­யில் உள்ள ராணு­வத் தளத்­தில் அவர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்.

இது குறித்து இந்­திய ராணு­வம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் தடை செய்­யப்­பட்ட லஷ்­கர்-இ-தொய்பா இயக்­கத்­தைச் சேர்ந்த ஒரு­வரை உயி­ரோடு பிடித்­துள்­ளதாக தெரி­விக்­கப்­பட்­டது.

காஷ்­மீ­ரில் பர­முல்லா மாவட்­டத்­தில் உள்ள உரி பகுதி எல்­லை­யில் சிலர் ஊடு­ருவ முயற்சி செய்­த­போது அவர் பிடி­பட்­ட­தாக இந்­திய ராணு­வம் கூறியது.

இந்­தச்­சம்­ப­வத்­தில் மற்­றொரு போராளி சுட்­டுக் கொல்­லப்­பட்­டார்.

சிக்­கிய நபர் பாகிஸ்­தா­னில் உள்ள பஞ்­சாப் மாநி­லத்­தின் ஒகாரா மாவட்­டத்­தில் உள்ள திபால்­பூ­ரைச் ேசர்ந்­த­வர். கொல்­லப்­பட்­ட­வர் காரி அனாஸ் என்­ற­ழைக்­கப்­படும் 33 வயது அடிக்-உர்-ரெஹ்­மான். இவ­ரும் பஞ்­சாப் மாநி­லத்­தில் உள்ள அடோக் மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர்.

பெரு­ம­ள­வில் ஊடு­ரு­வல் மேற்­கொள்­ளப்­பட்­ட­தால் அதனை தடுத்து நிறுத்­து­வ­தற்­காக இந்­திய ராணுவ வீரர்­கள் பதில் நட­வ­டிக்கை எடுத்­த­னர்.

இதில் நான்கு வீரர்­கள் காயம் அடைந்­த­னர். ஒரு கும்­பல் பாகிஸ்­தா­னுக்கு தப்­பி­யோ­டி­விட்­டது என்று இந்­திய ராணு­வம் கூறி­ய­தாக டெக்­கான் குரோ­னிக்­கல் குறிப்­பிட்­டது.

உரி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய மூத்த ராணு­வத் தள­ப­தி­களில் ஒரு­வ­ரான மேஜர் ஜென­ரல் வீரேந்­திரா வாட்ஸ், ஒகா­ரா­வைச் சேர்ந்த மறைந்த முஹ­மட் லத்­தீ­ஃபின் மக­னான பாபர் அலி பட்ரா தான் லஷ்­கர்-இ-தொய்பா இயக்­கத்­தைச் சேர்ந்­த­வர் என்­பதை ஒப்­புக் கொண்­ட­தாக தெரி­வித்­தார்.

2019ல் அவ்­வி­யக்­கம் நடத்­திய ராணு­வப் பயிற்­சி­யில் அவர் பங்­கேற்­றுள்­ளார்.

தன்­னு­டைய தாயின் கைபேசி எண்ணை அவர் அதி­கா­ரி­க­ளி­டம் கொடுத்­துள்­ளார் என்று அந்த ராணுவ அதி­காரி மேலும் தெரி­வித்­தார்.

கடந்த ஒரு வாரத்­தில் இந்­தி­யா­வுக்­குள் ஊடு­ருவ முயற்சி செய்த ஏழு போரா­ளி­களை இந்­திய ராணு­வம் சுட்­டுக் கொன்­றுள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!