சீனா படைகுவிப்பு: இந்தியா கண்டனம்

இலங்கையில் சீன ஆதிக்கம்: முட்டுக்கட்டை போட்ட இந்தியா

புது­டெல்லி: லடாக் எல்­லைப் பகு­தி­யில் சீன ராணு­வம் மீண்­டும் படை­களைக் குவித்து வரு­வதை ஏற்க இய­லாது என இந்­தியா தெரி­வித்­துள்­ளது.

கிழக்கு லடாக் பகு­தி­யில் சீனா மீண்­டும் ஆத்­தி­ர­மூட்­டும் செயல்­களில் ஈடு­பட்டு வரு­வ­தாக இந்­தியா குறிப்­பிட்­டுள்­ளது.

எல்­லைப் பகு­தி­யில் தற்­போது உள்ள நிலையை மாற்ற சீனா ஒரு­த­லைப்­பட்­ச­மாக முயற்சி மேற்­கொண்டு வரு­வ­தால் எல்­லை­யில் அமைதி பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக இந்­திய வெளி­யு­றவு அமைச்சு கூறி­யுள்­ளது.

சீன ராணு­வம் எல்­லை­யில் ராணு­வத் தள­வா­டங்­க­ளைக் குவித்து வரு­வ­தாக குறிப்­பிட்­டுள்ள இந்­திய வெளி­யு­றவு அமைச்சு, இதற்கு எதிர்­வி­னை­யாக இந்­தி­யா­வும் எதிர்­வ­ரி­சை­யில் ஆயு­தப்­ப­டை­களை நிறுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்டு உள்­ள­தாக கூறி­யுள்­ளது.

கிழக்கு லடாக்­கில் எல்­லைக் கட்­டுப்­பாட்டு கோட்­டில் நில­வும் பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்க சீனா விரைந்து நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் என எதிர்­பார்ப்­ப­தாக குறிப்­பிட்­டுள்ள வெளி­யு­றவு அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் அரிந்­தம் பாசி, இரு தரப்பு ஒப்­பந்­தங்­க­ளின் அடிப்­ப­டை­யில் பதற்ற நிலை தணிக்­கப்­பட வேண்­டும் என்று கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, இலங்­கை­யில் பெரும் முத­லீ­டு­க­ளைச் செய்து வரும் சீனா, அதன் கட­லோ­ரப் பகு­தி­க­ளி­லும் ஆதிக்­கம் செலுத்­து­வதை இந்­தி­யா­வும் அமெ­ரிக்­கா­வும் விரும்­ப­வில்லை என்­கி­றார்­கள் பாது­காப்பு வல்­லு­நர்­கள்.

இந்­நி­லை­யில், இலங்­கைக்­காக ஆழ்­க­டல் கொள்­க­லன் முனை­யம் ஒன்றை நிர்­மா­ணிக்­கும் ஒப்­பந்­தம் ஒன்­றில், இந்­தி­யா­வின் அதானி குழு­ம­மும் இலங்கை துறை­முக ஆணை­ய­மும் கையெ­ழுத்­திட்­டுள்­ளன.

952 மில்­லி­யன் டாலர் மதிப்­புள்ள இந்த ஒப்­பந்­தம்­தான் இலங்­கை­யின் துறை­மு­கத் திட்­டங்­க­ளுக்­கான வெளி­நாட்டு முத­லீடு­களில் ஆகப் பெரி­யது என இலங்கை துறைமுக ஆணையம் கூறியுள்ளது.

இதன் மூலம் இலங்­கை­யில் அதி­க­ரித்து வரும் சீனா­வின் ஆதிக்­கத்­துக்கு இந்­திய தரப்­பில் இருந்து முட்­டுக்­கட்டை போடப்­பட்­ட­தாக பாது­காப்பு வல்­லு­நர்­கள் கரு­து­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!