கன்னட மொழியில் பொறியியல் படிப்பு

புது­டெல்லி: கர்­நா­ட­கா­வில் கன்­ன­டத்­தில் பொறி­யி­யல் பாடம் கற்­பிக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், தாய்­மொ­ழி­யில் பொறி­யி­யல் படிப்பை மேற்­கொள்­ளும் மாண­வர்­க­ளுக்கு ஊக்­கத் தொகை­யும் அளிக்­கப்­பட உள்­ளது.

இத்­த­க­வலை அம்­மா­நில உயர் கல்­வித்­துறை அமைச்­சர் அஷ்­வத் நாரா­யண் தெரி­வித்­துள்­ளார்.

பெங்­க­ளூ­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், கன்­னட மொழி­யில் பொறி­யி­யல், மருத்­து­வம் கற்­பிக்க வேண்­டும் எனக் கல்­வி­யா­ளர்­கள் நீண்ட கால­மா­கக் கோரி வந்­த­தா­க­வும் அதை அரசு ஏற்­றுக் கொண்­ட­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

கன்­னட வழி­யில் பொறி­யி­யல் பாடங்­க­ளைக் கற்­பிக்க அனு­மதி கோரி கர்­நா­டக அரசு தேசிய அங்கீ­கார வாரி­யத்­தி­டம் விண்­ணப்­பித்­து இருந்தது என்றும் அதை அவ்­வா­ரி­யம் ஏற்­றுக்­கொண்­ட­தா­க­வும் அமைச்­சர் அஷ்­வத் நாரா­யண் தெரி­வித்­தார்.

"முதற்­கட்­ட­மாக, நான்கு பொறி­யி­யல் கல்­லூ­ரி­களில் கன்­னட வழி­யில் பொறி­யி­யல் கற்­பிக்­கப்­படும். ஒவ்­வொரு கல்­லூ­ரி­யி­லும் முப்­பது மாண­வர்­கள் சேர்க்­கப்­ப­டு­வார்­கள். இதற்­கான வகுப்­பு­கள் இம்­மாத இறு­தி­யில் தொடங்­கும்.

"கன்­னட வழி­யில் பயில்­வோரை ஊக்­கு­விக்­கும் நோக்­கில் குறைந்த கட்­ட­ணம், கல்வி ஊக்­கத்­தொகை ஆகி­ய­வை­யும் வழங்க முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. ," என்­றார் அமைச்­சர் அஷ்­வத் நாரா­யண்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!