எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத் தளபதி திடீர் ஆய்வு

ஸ்ரீநகர்: லடாக்கில் கிழக்கு, வடக்கு எல்லைகளில் சீன ராணுவம் படைகளைக் குவிப்பது கவலை அளிப்பதாக இந்திய ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார்.

அண்மைய சில தினங்களாக இந்தப் படைக்குவிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் எல்லையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே. அப்போது எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாகத் தெரிகிறது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனப்படைகளின் நடமாட்டத்தையும் ஆப்கானிஸ்தான் நிலைமையையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக குறிப்பிட்டார்.

எத்தகைய சூழ்நிலையிலும் பதிலடி கொடுப்பதற்கு இந்திய வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் இந்திய, சீன எல்லைப் பகுதியில் போர் பதற்றம் ஏற்படுவதை விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எல்லையில் குவிக்கப்பட்ட படைகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக இந்தியா, சீனா இடையே இதுவரை 12 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

விரைவில் 13ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், எல்லையில் சீனா மீண்டும் தனது துருப்புகளை குவித்து வருகிறது. இதையடுத்து, ராணுவத் தளபதி அங்கு ஆய்வு மேற்கொண்டார். இதற்கிடையே, காஷ்மீருக்குள் ஆளில்லா சிறிய ரக வானூர்திகள் மூலம் பாகிஸ்தான் ராணுவ ஆதரவுடன் ஆயுதங்கள் அனுப்பப்படுவதாக இந்திய ராணுவம் மீண்டும் குற்றம்சாட்டி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!