மோடி: 50 மில்லியன் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மக்களின் வறுமை குறித்து ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஜல்ஜீவன் குடிநீர்த் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 50 மில்லியன் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 2009ஆம் ஆண்டு வரை 30 மில்லியன் மக்கள்தான் குழாய் மூலம் குடிநீர் பெற்று வந்ததாகவும், 2009ஆம் ஆண்டு ஜல்ஜீவன் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு 50 மில்லியன் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

"நாடு முழுவதும் 125,000 கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தற்போது குடிநீர் சென்றடைகிறது. 70 ஆண்டுகளாக நடந்ததைவிட கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகப் பணிகள் நடந்துள்ளன.

"இதனால் நாட்டின் எந்த பகுதிக்கும் வாகனங்கள் அல்லது ரயில்கள் மூலம் குடிநீரை அனுப்ப வேண்டிய சூழ்நிலை உருவாகவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் தண்ணீர் கொள்கையை புறக்கணித்துவிட்டனர். அவர்களுடைய வீடுகளிலும் நீச்சல் குளத்திலும்தான் தண்ணீர் இருந்தது," என்று மோடி கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!