சஞ்சய் அரோரா: சீன ராணுவம் ஊடுருவ முயற்சி செய்கிறது

புது­டெல்லி: இந்­திய எல்­லைக்­குள் சீன ராணு­வம் அவ்­வப்­போது அத்­து­மீறி நுழைய முயற்சி செய்­வது உண்­மை­தான் என்று இந்தோ-திபெத் எல்­லைப் படை (ஐடி­பிபி) இயக்­கு­நர் சஞ்­சய் அரோரா தெரி­வித்­துள்­ளார்.

நேற்று எல்­லைப் படை­யின் மிதி­வண்டி பேர­ணி­யைத் தொடக்கி வைத்த அவர், நாட்­டின் எல்­லை­யைப் பாது­காக்­கும் உன்­ன­தப் பணியை இந்தோ-திபெத் எல்­லைப் படை மேற்­கொண்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

"எல்லை ஒரு­மைப்­பாட்டை நிர்­வ­கிக்­கும் பணி எங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. ஏற்­கெ­னவே பல­முறை எங்­கள் திற­மையை வெளிப்­ப­டுத்தி உள்­ளோம்.

"எல்­லைப் படை­யின் தயார் நிலை மன­நி­றைவை அளிக்­கிறது," என்­றார் சஞ்­சய் அரோரா.

கடந்த ஆகஸ்ட் மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாக ஊடகங்களில் செய்தி வெளியானது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சீனா ஊடுருவ முயற்சித்தது உண்மைதான் என்றார்.

"இந்தோ-திபெத் எல்லைப் படை நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் படை. எத்தகைய ஊடுருவலாக இருந்தாலும், அதைத் தடுத்து தகுந்த பதிலடியைக் கொடுத்து வருகிறோம். கடந்த கால சம்பவங்களை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும்," என்றார் சஞ்சய் அரோரா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!