‘பண்டோரா பேப்பர்ஸ்’ விவகாரம்: கண்காணிக்க கூட்டுக்குழு நேரடி வரிகள் வாரியம், அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கியின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்

புது­டெல்லி: உல­கம் முழு­வ­தும் பர­ப­ரப்­பை­யும் பல்­வேறு விவா­தங்­க­ளை­யும் எழுப்பி உள்ள 'பண்­டோரா பேப்­பர்ஸ்' குறித்து கூட்­டுக்­குழு விசா­ரணை மேற்­கொள்­ளும் என மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

இந்­தக் கூட்­டுக்­கு­ழு­வில் நாட்­டில் உள்ள பல்­வேறு விசா­ரணை அமைப்­பு­கள் இடம்­பெற்­றுள்­ள­தா­க­வும் அர­சுத் தரப்­பில் கூறப்­பட்­டுள்­ளது.

வரி குறை­வாக உள்ள பல்­வேறு நாடு­களில் இந்­தி­யர்­கள் நிறைய சொத்­து­கள் வாங்கி இருப்­ப­தா­க­வும் முத­லீடு செய்­தி­ருப்­ப­தா­க­வும் 'பண்­டோரா பேப்­பர்ஸ்' மூலம் தெரிய வந்­துள்­ளது.

இதை­ய­டுத்து, மத்­திய நேரடி வரி­கள் வாரி­யத்­தின் தலை­வர் தலை­மை­யில் அமைக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணைக் குழு­வில் அம­லாக்­கத்­துறை, ரிசர்வ் வங்கி, நிதி புல­னாய்­வுப் பிரிவு உள்­ளிட்ட பல்­வேறு அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள் இடம்­பெற உள்­ள­னர்.

கிரிக்­கெட் வீரர் சச்­சின் டெண்­டுல்­கர், தொழி­ல­தி­பர் நீரவ் மோடி உள்­ளிட்ட ஏரா­ள­மான இந்­திய பிர­மு­கர்­கள் வெளி­நா­டு­களில் சொத்­து­கள் வாங்கி குவித்­தி­ருப்­ப­தாக 'பண்­டோரா பேப்­பர்ஸ்' தெரி­வித்­துள்­ளது.

அதன் பட்­டி­ய­லில் 380 இந்­தி­யர்­க­ளின் பெயர்­கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

உல­கெங்­கி­லும் உள்ள 600க்கும் மேற்­பட்ட செய்­தி­யா­ளர்­கள் புல­னாய்வு செய்து திரட்­டிய தக­வல்­கள், 14 உலக அள­வி­லான பெரு நிறு­வ­னங்­களில் இருந்து கசிந்த சுமார் 19 மில்­லி­யன் கோப்­பு­களில் உள்ள தக­வல்­கள் 'பண்­டோரா பேப்­பர்ஸ்' என்ற தலைப்­பின் கீழ் வெளி­யாகி உள்­ளன. ஏரா­ள­மான உலக நாடு­க­ளின் தலை­வர்­கள், முக்­கிய பிர­மு­கர்­கள் பற்­றிய விவ­ரங்­கள் இவற்­றில் இடம்­பெற்­றுள்­ளன.

கடந்த 2016ஆம் ஆண்டு 'பனாமா பேப்­பர்ஸ்' என்ற பெய­ரில் இதே போல் முக்­கிய ஆவ­ணத் தக­வல்­கள் வெளி­யாகி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

அச்­ச­ம­யம் டெண்­டுல்­கர், அமி­தாப் பச்­சன், ஐஸ்­வர்யா ராய், தொழி­ல­தி­பர் கவு­தம் அதா­னி­யின் மூத்த சகோ­த­ரர் வினோத் அதானி ஆகி­யோ­ரின் பெயர்­கள் அடி­பட்­டன.

இந்­நி­லை­யில் சர்ச்சை பெரி­தாகி­வி­டா­மல் இருக்க, பிரிட்­ட­னில் வர்­ஜின் தீவு­களில் இருந்த தனது நிறு­வ­னத்தை சச்­சின் டெண்­டுல்­கர் மூடி­விட்­ட­தாக 'பண்­டோரா பேப்­பர்ஸ்' தெரி­விக்­கிறது.

இந்­தி­யா­வில் வரி ஏய்ப்பு செய்­த­வர்­களும் வங்­கி­களில் கடன் வாங்கி திருப்­பிச் செலுத்­தா­மல் இருப்­ப­வர்­களும் வெளி­நா­டு­களில் பெரும் தொகையை முத­லீடு செய்­தி­ருப்­ப­தாக 'பனாமா பேப்­பர்ஸ்' தெரி­விக்­கிறது.

இதை­ய­டுத்து, மத்­திய அர­சால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள கூட்­டுக்கு­ழு­வா­னது இந்த விவ­கா­ரம் தொடர்­பான விசா­ர­ணை­யைக் கண்­கா­ணிக்­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக மத்­திய நேரடி வரி­கள் வாரி­யம் வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில், பொரு­ளா­தார முறை­கே­டு­களில் ஈடு­பட்­ட­வர்­கள் குறித்த பட்­டி­யலை அனைத்­து­ல­கப் புல­னாய்வு செய்­தி­யா­ளர்­கள் கூட்­ட­மைப்பு வெளி­யி­ட­வில்லை என்றும் முறை­கே­டு­கள் குறித்து சட்­டப்­படி விசா­ரணை நடத்­தப்­படும் என்­றும் தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!