‘பாம்பை கடிக்க விட்டு கொலை செய்யும் செயல் கூடுகிறது’

புது­டெல்லி: ராஜஸ்­தான் மாநி­லத்­தில் பாம்­பைக் கடிக்கவிட்டு ஒரு­வ­ரைக் கொலை செய்­வது அதி­க­ரித்து வரு­வ­தாக வழக்கு ஒன்றை விசா­ரித்த உச்ச நீதி­மன்­றம் கவலை தெரி­வித்­தது.

ராஜஸ்­தா­னில் பாம்­புக் கடி­யால் உயி­ரி­ழப்­பது இயல்­பான ஒன்று.

ஆண்டுதோறும் ஏரா­ள­மா­னோர் பாம்­புக் கடி­யால் உயி­ரிழக்­கி­றார்­கள் என்­ப­தால் கொலைப் பழியைப் பாம்­பின் மீது போட்டு தப்­பி­வி­ட­லாம் என்று சதி செய்து இத்­த­கைய கொலை­க­ளைச் செய்­கி­றார்­கள் என்­றும் இது தடுக்­கப்­பட வேண்­டிய ஒன்று என்­றும் நீதிபதிகள் கூறி­னர்.

ராஜஸ்­தா­னில் ஜூன்­ஜுனு என்ற மாவட்­டத்­தில் கடந்த 2018ஆம் ஆண்டு, ஜூன் 2ஆம்­தேதி பாம்பு கடி­யால் சுபோத் தேவி என்­ப­வர் உயி­ரி­ழந்­தார்.

அந்த மாதின் மரு­ம­க­ளான அல்­பனா என்­ப­வர் தன் கள்­ளக் காத­லன், அவ­னு­டைய நண்­பன் ஆகி­யோ­ரு­டன் சேர்ந்து ஒரு பாம்பை­விட்டு மாமி­யா­ரைக் கடிக்­க­வைத்­து அவரைக் கொன்றுவிட்ட தாக பிறகு விசாரணையில் தெரி­ய­வந்­தது.

அதை­ய­டுத்து அந்த மூவ­ரும் கைதாகி கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறை­யில் இருந்து வரு கிறார்கள்.

தங்க­ளுக்குப் பிணை வழங்க வேண்­டும் என்று உச்ச நீதி­மன்­றத்­தில் அவர்­கள் மனுத்­தாக்­கல் செய்­த­னர். அதை விசா­ரித்த நீதி­பதி­கள் பிணையை அனு­ம­திக்க மறுத்­து­விட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!