அடுத்த மூன்று மாதங்களுக்கு மிகுந்த கவனம் தேவை

சுகாதார அமைச்சு: தினமும் 500,000 நோயாளிகளைக் கையாள முன்னேற்பாடுகள் தயார்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் தொற்­றுப்­ப­ர­வல் மீண்­டும் அதி­க­ரிக்­காமல் இருக்க நடப்பு அக்­டோ­பர் முதல் டிசம்­பர் வரை­யி­லான மூன்று மாதங்­க­ளுக்கு மிகுந்த கவ­னத்­து­டன் இருக்க வேண்­டும் என மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

அதே வேளை­யில் தொற்­றுப் பாதிப்பு அதி­க­ரிக்­கும் பட்­சத்­தில் தினந்­தோ­றும் ஐந்து லட்­சம் புதிய நோயா­ளி­களை கையா­ளக்­கூ­டிய அள­வுக்கு அனைத்து முன்­னெச்­சரிக்கை ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்­டுள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்­சின் இணைச் செய­லா­ளர் லாவ் அகர்­வால் கூறி­யுள்­ளார்.

"அடுத்­த­டுத்து சில பண்­டி­கை­கள் கொண்­டா­டப்­பட உள்­ளன. நவ­ராத்­திரி, தீபா­வளி, துர்கா பூஜை, கிறிஸ்து­மஸ் ஆகி­யவை தவிர, திரு­ம­ணங்­களும் அதிக அள­வில் நடை­பெ­றும் கால­கட்­டம் இது. எனவே இந்த ஆண்டு இறு­தி­வரை மக்­கள் தொற்­று பாதிப்பு அதி­கரித்து­வி­டாத வகை­யில் எச்­ச­ரிக்கை­யு­டன் செயல்­பட வேண்­டும்," என்­றார் லாவ் அகர்­வால்.

இந்­தி­யா­வில் கொரோனா இரண்­டா­வது அலை இன்­னும் ஓய­வில்லை என்­றும் தின­மும் புதி­தாக 20 ஆயி­ரம் பேர் பாதிக்­கப்­ப­டு­கி­றார்­கள் என்­றும் அவர் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

இதற்­கி­டையே, நாட்­டின் எந்­தப் பகு­தி­யி­லும் தடுப்­பூசி பற்­றாக்­குறை தொடர்­பான புகார்­கள் ஏதும் இல்லை என்று நிதி ஆயோக் உறுப்­பி­ன­ரான விகே பால் கூறி­யுள்­ளார். எனவே, அனைத்து மக்­களும் இரண்டு தடுப்­பூ­சி­களும் போட்­டுக்­கொள்ள வேண்­டும் என அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

தற்­போ­துள்ள தர­வு­க­ளின்­படி நாட்­டில் புதி­தாக கொரோனா திரிபுகள் ஏதும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என்­றும் விகே பால் உறுதி செய்­துள்­ளார்.

"கொரோனா தடுப்­பூசி போடப்­பட்டு வரும் நிலை­யி­லும், தினந்­தோ­றும் புதி­தா­கப் பல­ருக்கு தொற்­றுப் பாதிப்பு ஏற்­ப­டு­கிறது. எனவே இவ்­வி­ஷ­யத்­தில் நாம் தொடர்ந்து ஏதே­னும் கற்­றுக்­கொள்ள வேண்­டி­இருக்­கிறது. ஒரே நாளில் 500,000 பேர் பாதிக்­கப்­பட்­டா­லும் நிலை­மையைச் சமா­ளிக்க முடி­யும் எனில், அதே எண்­ணிக்­கை­யி­லான மக்­கள் பாதிக்­கப்­ப­டு­வார்­கள் அல்­லது பாதிக்­கப்­பட வாய்ப்­புண்டு என்று அர்த்­தம் அல்ல," என்று விகே பால் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வில் நேற்று முன்­தி­னம் புதி­தாக மேலும் 21,257 பேருக்கு கிருமி தொற்­றி­ உள்­ளது. மேலும் 271 பேர் பலியாகி­விட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!