எல்லையில் இந்திய, சீன வீரர்கள் வாக்குவாதம்

புது­டெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டியுள்ள இந்­திய எல்­லைப் பகு­திக்­குள் நூற்­றுக்­கும் மேற்­பட்ட சீன ராணுவ வீரர்­கள் ஊடு­ருவ முயன்­ற­போது, இந்­திய ராணு­வம் தடுத்து நிறுத்­தி­யது. அப்­போது இரு தரப்­புக்­கும் இடையே கடும் வாக்­கு­வா­தம் மூண்­ட­தா­க ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடந்த மாதம் 30ஆம் தேதி­யன்று உத்­த­ர­காண்ட் மாநில எல்­லை­யிலும் சீன வீரர்­கள் ஊடு­ருவ முயன்ற தக­வலை மத்­திய அரசு வெளி­யிட்­டுள்­ளது.

அண்மையில் அரு­ணா­ச­லப் பிர­தேச மாநில எல்­லை­யில் உள்ள தவாங் என்ற பகு­திக்­குள் சீன வீரர்­கள் ஊடு­ரு­வி­னர். எனி­னும் அடுத்த சில நிமி­டங்­களில் இந்தோ-திபெத் எல்­லைப் பாது­காப்­புப் படை வீரர்­கள் அங்கு விரைந்து வந்­த­னர்.

பின்னர் இரு தரப்பும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டன. கைகலப்­பில் ஈடு­படும் அள­வுக்கு பதற்­றம் அதி­க­ரித்­த நிலையில், சீன வீரர்­கள் மீண்­டும் தங்­க­ளது எல்­லைப் பகு­திக்கு திரும்­பி­னர். சரி­யான எல்­லைக் கட்­டுப்­பாட்­டுக் கோடு தொடர்­பில் இந்­தி­யா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடையே நீண்ட கால­மாக எல்­லைத் தக­ராறு நீடிக்கிறது.

"அண்­மை­யில் தவாங் பகு­தி­யில் இரு தரப்­பி­லும் வழக்­க­மான சுற்­றுக்­கா­வல் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. வீரர்­கள் சுமார் நூறு பேர், இந்­திய எல்­லைப் பகு­திக்­குள் ஊடு­ரு­வி­னர். இதற்கு இந்­திய வீரர்­கள் எதிர்ப்பு தெரி­வித்­ததால் கடும் வாக்­கு­வா­தம் மூண்டது. அடுத்த சில மணி நேரம் பதற்­றம் நீடித்­தது. பின்­னர் அதி­கா­ரி­கள் அள­வில் பேச்­சு­வார்த்தை நடந்­தது. சீன வீரர்­கள் பின்­வாங்­கி­னர்," என்று இந்­திய ராணு­வம் தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!