ராணுவத் தளபதி: ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு

புதுடெல்லி: எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே 13ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்ற நிலையில், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் அமைதியற்ற சூழல் தொடர்ந்து நீடித்து வருவதாக இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே தெரிவித்துள்ளார்.

மேலும், ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீரில் ஊடுருவ வாய்ப்புள்ளதாகவும் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

"கிழக்கு லடாக் பகுதியில் சீனா தன் துருப்புகளைக் குவித்து வருகிறது. ராணுவக் கட்டமைப்பை பலப்படுத்தும் அதன் செயல்பாடுகள் கவலை அளிக்கின்றன.

"எல்லைப் பகுதியில் நடப்பவற்றை இந்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஒருவேளை அவர்கள் எல்லையில் தங்கப் போகிறார்கள் எனில் நாமும் அவ்வாறே செய்வோம். சீனப் படைகளைப் போன்று நாமும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது நல்லதுதான் என்றார் தளபதி நரவனே.

"உலகமே கொரோனா தொற்றுப் பரவலில் தத்தளித்தபோது, சீனா கிழக்கு லடாக்கில் எதற்காக மோதலைத் தூண்டியது என்பதைப் புரிந்துகொள்வது கடினம் ஆகும். ஆனால் எதுவாக இருந்தாலும், இந்திய ஆயுதப்படைகள் விரைவாக செயல்படுவதால் அவர்களால் விரைவாக எதையும் சாதிக்க முடியவில்லை," என்றார் தளபதி நரவனே.

ஆப்கானிஸ்தானில் முன்பு தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது, காஷ்மீரில் அந்நாட்டு வம்சாவளி பயங்கரவாதிகள் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், மீண்டும் அதுபோன்று நடக்கும் என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.

"ஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மை ஏற்படும்போது, அங்குள்ள பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி செய்வதை நாம் பார்க்க முடியும். எனினும் அத்தகைய முயற்சிகளை முறியடிக்க ராணுவம் தயாராக இருக்கும்," என்றார் தளபதி நரவனே.

இதற்கிடையே, பண்டிகை காலத்தின்போது டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசை உளவுத்துறை எச்சரித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!