விவசாயிகள் எச்சரிக்கை: மத்திய அமைச்சர் மகன் கைது

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்‌ராவின் மகன் ஆசிஷ் மிஸ்‌ராவை (படம்) அம்மாநில காவல்துறை அதிரடியாகக் கைது செய்தது.

நேற்று முன்தினம் நடத்தப்பட்ட விசாரணையின்போது போலிசார் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஆசிஷ் பதிலளிக்கவில்லை என்றும் அவரது நண்பர்கள் இருவர் கைதாகி உள்ளனர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

லக்கிம்பூர் பகுதியில் நிகழ்ந்த வன்முறையின்போது நான்கு விவசாயிகள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர். விவசாயிகள் மீது ஒரு கார் மோதியதை அடுத்து வன்முறை வெடித்தது.

ஆசிஷ் மிஸ்‌ராதான் மூன்று வாகனங்களுடன் வேகமாக வந்து விவசாயிகள் மீது மோதினார் என்று விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் சம்பவ இடத்தில் தாம் இல்லை என்று ஆசிஷ் மிஸ்‌ரா கூறியுள்ளார்.

இதை ஏற்காத விவசாய சங்கங்கள், ஆசிஷ் மிஸ்‌ராவை கைது செய்யவில்லை என்றால், நாடு தழுவிய அளவில் ரயில் மறியல் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்தன. மேலும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உருவப் பொம்மைகளை எரிக்கும் போராட்டமும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆசிஷ் மீது கார் ஏற்றி நான்கு விவசாயிகளை கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்்த போலிசார் அவரை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் அவர் நேரில் முன்னிலையாகவில்லை.

இந்நிலையில், வன்முறைச் சம்பவம் தொடர்பான காவல்துறை விசாரணை குறித்து உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. வழக்கு சரிவர கையாளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

சனிக்கிழமை மாலை லக்கிம்பூர் கெரியில் உள்ள காவல்துறை அலுவலகத்துக்கு நேரில் வந்தார் ஆசிஷ் மிஸ்ரா. அவரிடம் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

பல்வேறு கேள்விகளுக்கு ஆசிஷ் அளித்த பதில்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததாகவும் பல்வேறு தகவல்களை அவர் மறைப்பதாகவும் போலிசார் கூறியதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. இதையடுத்து அவர் கைதானார். அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, விசாரணைக்கு ஒத்துழைக்காததால் ஆசிஷ் மிஸ்‌ரா கைது செய்யப்பட்டதாக உத்தரப் பிரதேச மாநில காவல்துறை தலைவர் டிஐஜி உபேந்திர குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச வன்முறை வழக்கில் நடவடிக்கை; விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!