‘போதிய நிலக்கரி உள்ளது, மின்தடை வராது’

புது­டெல்லி: இந்­தி­யா­வில் செயல்­படும் மின்­னுற்­பத்தி நிலை­யங்­களின் தேவை­களை நிறை­வேற்­றும் அள­வுக்­குப் போதிய நிலக்­கரி உள்­ள­தா­க­வும் இத­னால் மின்­சார விநி­யோ­கம் பாதிக்­கப்­பட வாய்ப்­பில்லை என்­றும் இந்­திய நிலக்­கரி அமைச்­சு உறுதி கூறியுள்­ளது.

மின் உற்­பத்தி நிலை­யத்­தின் நிலக்­கரி கையி­ருப்பு சுமார் 72 லட்­சம் டன்­கள் என்­றும் இது நான்கு நாட்­க­ளுக்­குப் போதுமானது என்­றும் கூறிய அமைச்சு, நிலக்­கரி இந்­தியா நிறுவனத்­தி­டம் 400 லட்­சம் டன்­க­ளுக்கு மேல் நிலக்­கரி இருப்பு உள்­ள­தா­க­வும் குறிப்­பிட்­டது.

நாட்­டில் உள்ள அனல் மின் நிலை­யங்­க­ளுக்கு நிலக்­கரி விநி­யோ­கிப்­ப­து­டன் அலு­மி­னி­யம், சிமெண்ட், எஃகு போன்ற ஆலை­களுக்­கும் நாள்­தோ­றும் 2.5 லட்­சம் டன் நிலக்­க­ரியை நிலக்­கரி இந்­தியா நிறு­வ­னம் அனுப்பி வரு­வ­தா­க­வும் நாட்­டில் நிலக்­கரி இருப்பு போதிய அள­வில் உள்­ள­தையே இது பிரதிபலிக்­கிறது என்­றும் அமைச்சு விளக்­கி­யது.

நிலக்­கரி நிறு­வ­னங்­களில் இருந்து அதிக அள­வில் நிலக்­கரி கிடைப்­ப­தால் அனல் மின்­நி­லை­யங்­களில் மின் உற்­பத்தி இந்­தாண்டு சுமார் 24% அதி­க­ரித்­துள்ளதாகவும் அமைச்சு சுட்­டி­யது.

இந்­தியாவில் பாதிக்­கும் அதி­க­மா­ன அனல் மின் நிலை­யங்­கள் போதிய நிலக்­கரி இல்­லா­மல் மின் உற்­பத்­தியைக் குறைத்­து­விட்­ட­தா­க­வும் அனல் மின் நிலை­யங்­களில் அடுத்த சில நாட்­களுக்கு மட்­டுமே நிலக்­கரி கையி­ருப்­பில் உள்­ள­தால் மின்­சாரப் பற்­றாக்­குறை ஏற்­படும் வாய்ப்பு உள்­ள­தா­க­வும் வெளி­யான தக­வல்­கள் ஆதா­ர­மற்­ற­வை என்றும் அமைச்சு தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!