செய்திக்கொத்து

ரூ.75 கோடி அபராதம் வசூல்

மும்பை: மும்பையில் கொவிட்-19 கிருமித்தொற்று குறித்த பயமின்றி முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிந்த மக்களிடம் மாநகராட்சி பகுதியில் ரூ.75 கோடியை கடந்த 11ஆம் தேதி வரை அபராதமாக மும்பை மாநகராட்சி வசூலித்துள்ளது. இதில் மும்பை போலிசும் ரயில்வே துறையும் வசூல் செய்த தொகையும் அடங்கும். பொது இடங்களில் எச்சில் துப்பியவர்களுக்கு மட்டும் ரூ.72 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ஓட்டப் பந்தயம்: வயதான பெண்கள்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம், பாண்டா கிராமத்தில் வயதான பெண்கள் கையில் பாத்திரத்துடன் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றனர். போபால் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியின் மூலம் வீடுகளில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்தும்படியும் திறந்தவெளி கழிவறை பழக்கத்தை விட்டொழிப்பதற்கும் அங்கு வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னாள் பிரதமர் குணமடைய இந்நாள் பிரதமர் பிரார்த்தனை

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், 88, உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல் அதிகமானதை அடுத்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தேவையான ஊட்டச்சத்து, திரவ உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைந்து நல்ல உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜாதகம் அடிப்படையில் பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்கள்

சபர்மதி: ஜாதகத்தின் அடிப்படையில் மாணவர்களை பள்ளியில் சேர்த்துக்கொள்ளும் ஓர் அதிசயமான பள்ளிக்கூடம் குஜராத்தில் இயங்கி வருகிறது.

குஜராத் மாநிலம், சபர்மதி எனும் பகுதியில் இருக்கும் ஹேம்சந்திராச்சார்யா சமஸ்கிருத பாடசாலையில் பண்டைய முறையிலான ஜாதகம் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக அந்த பள்ளியின் நிர்வாகியான அகில் உத்தம் ஷா என்பவர் தெரிவித்தார்.

16 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு கல்வி பயில்கின்றனர். சிலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். இப்பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்றால் சாதி, மதம் தேவையில்லை. ஆனால், ஜாதகம் இருப்பது அவசியம் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!