இந்தியாவில் தொற்று தொடர்ந்து குைறகிறது; 2வது தடுப்பூசி போட தீவிர முயற்சி

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் தொடர்ந்து குறைந்து வரு­கின்­றன. சென்ற சனிக்­கி­ழமை அன்று 16,326 பேர் பாதிக்­கப்­பட்ட நிலை­யில் அடுத்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 15,906 பேருக்குப் பாதிப்பு இருப்­பது கண்­டறி­யப்பட்­டுள்­ளது.

கேர­ளா­வில் மட்­டும் 8,909 பேர் பாதிக்­கப்­பட்­ட­தாக மத்­திய சுகா­தார அமைச்சு வெளி­யிட்­டுள்ள தக­வல் மூலம் தெரிய வரு­கிறது.

இதன்­மூ­லம் மொத்த தொற்­றுப் பாதிப்பு எண்­ணிக்கை 3,41,75,468 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

அதே சம­யத்­தில் தொற்று பாதிப்பு­களால் ஒரே நாளில் 561 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இதன் ­மூ­லம் உயி­ரி­ழந்­தோர் மொத்த எண்­ணிக்கை 4,54,269 ஆக உயர்ந்­துள்­ளது. உயி­ரி­ழப்பு விகி­தம் 1.33% ஆக உள்­ளது.

இதற்­கி­டையே இந்­தி­யர்­கள் முதல் தடுப்­பூசி போட்­டுள்ள நிலை­யில் 2வது தடுப்­பூசி போடு­வோ­ரின் எண்­ணிக்கை குறை­வாக உள்­ளது.

எனவே 2வது முறை தடுப்­பூசி போடு­வ­தில் கவ­னம் செலுத்­து­மாறு மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­க­ளுக்கு மத்­திய அரசு அறி ­வு­றுத்தியிருக்­கிறது.

"நாடு முழு­வ­தும் இது­வரை 71.24 கோடி முதல் முறை தடுப்­பூசி போடப்­பட்டு இருக்­கிறது. இதன் மூலம் 76 விழுக்­காடு மக்கள் பலன் பெற்­றுள்­ள­னர்.

"அதே நேரம் 30.06 கோடி பேர் அதா­வது 32 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே 2வது தடுப்­பூசி போட்­டுள்­ள­னர்.

"எனவே முதல் முறை தடுப்­பூசி போட்டு இடை­வெளி காலம் முடிந்த பய­னா­ளி­க­ளுக்கு 2வது தடுப்பூசி போடு­வ­தில் கவ­னம் செலுத்த வேண்­டும்," என்று சுகா­தார அமைச்சு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இது தொடர்­பாக மாவட்­டம் வாரி­யாக பய­னா­ளி­களைக் கணக்­கெ­டுத்து 2வது தடுப்­பூசி போட வேண்­டிய பய­னா­ளி­களை அடை­யா­ளம் கண்­ட­றி­ய­லாம் என்று சுகா­தார செய­லா­ளர் ராஜேஷ் பூஷண் தெரி­வித்து உள்­ளார்.

இந்த நிலை­யில் மத்­திய அமைச்­சர் பிர­க­லாத் ஜோஷி, "உல­கம் முழு­வ­தும் 700 கோடி கொரோனா தடுப்­பூ­சி­கள் போடப்பட்டுள்ளன.

"அவற்­றில் இந்­தியா 100 கோடி கொரோனா தடுப்­பூ­சி­களைச் செலுத்தியுள்­ளது," என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்­தியா, நூறு கோடி தடுப்­பூசி இலக்கை எட்டி சாதனை படைத்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!