மும்பை: நடிகர் ஷாருக் கான் பாஜகவில் இணைந்துவிட்டால் அவர் மகன் மீதான வழக்கில் போதைப் பொருள் சர்க்கரையாக மாறிவிடும் என்று மகாராஷ்டிர அமைச்சர் சஹாஜன் புஜபால் கிண்டலடித்துள்ளார்.
இந்த வழக்கு வேண்டுமென்றே புனையப்பட்டதுபோல் தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு இதே போன்று மற்றொரு மகாராஷ்டிரா அமைச்சரும் குற்றம் சாட்டியிருந்தார்.
ஆர்யன் கானை போதைப் பொருள் வழக்கில் சிக்க வைக்க பாஜக சதித் திட்டம் தீட்டி வருவதாகவும் அவர்களின் இலக்கு நடிகர் ஷாருக்கான்தான் எனவும் மகாராஷ்டிரா மாநில அமைச்சரான நவாப் மாலிக் கூறியிருந்தார்.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் போதை விருந்தில் பங்கேற்றதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை கடந்த 3ஆம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
ஆனால் இதுவரை தம்மிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட வில்லை என்றும் வாட்ஸ்அப் உரை யாடல்களை போலிசார் தவறாக சித்திரிப்பதாகவும் தமது பிணை மனுவில் ஆர்யன் கான் தெரிவித்து உள்ளார்.
ஆர்யன் கானின் நீதிமன்ற காவல் வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.