மாநிலங்கள் உருவான நாளில் அதிபர் வாழ்த்து

புது­டெல்லி: இந்­தி­யா­வில் நேற்று மாநி­லங்­கள் உரு­வான நாள் கொண்­டா­டப்­பட்­டது. இதை­ய­டுத்து கர்­நா­டகா, கேரளா உள்­ளிட்ட மாநில மக்­க­ளுக்கு அதி­பர் ராம்­நாத் கோவிந்த் வாழ்த்­துத் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தியா சுதந்­தி­ரம் பெற்­ற­தும் நாட்­டின் பல பகு­தி­கள் மாகா­ணங்­க­ளாக இணைக்­கப்­பட்டு இருந்­தன.

1956 நவம்­பர் 1ஆம் தேதி அன்று சென்னை மாகா­ணத்­தில் இருந்து ஆந்­திரா, கர்­நா­டகா, கேரளா ஆகிய மாநி­லங்­கள் உரு­வா­கின.

இதே­போல வட இந்­தி­யா­வில் மத்­திய பிர­தே­சம், ஹரி­யானா, பஞ்­சாப், சத்­தீஸ்­கர் உள்­ளிட்ட மாநி­லங்­கள் ஒருங்­கி­ணைந்த சமஸ்­தா­னத்­தில் இருந்து உத­ய­மா­னது.

இத­னால், நவம்­பர் 1ஆம் தேதி மாநி­லங்­கள் உரு­வான நாளாக ஆண்­டு­தோ­றும் கடைப் ­பி­டிக்­கப்­பட்டு அந்­தந்த மாநில அரசு விழா­வாக நடை­பெற்று வரு­கிறது.

இந்த நிலை­யில் மாநில மக்­க­ளுக்கு அதி­பர் ராம்­நாத் கோவிந்த் வாழ்த்து தெரி­வித்­துள்­ளார்.

மேலும் டுவிட்­ட­ரில் வெளி­யிட்ட தக­வ­லில், "மொழி­வா­ரி­யாக மாநி­லங்­கள் உரு­வான நாளன்று ஆந்­தி­ரப் பிர­தே­சம், சத்­தீஸ்­கர், ஹரி­யானா, கர்­நா­டகா, கேரளா, மத்­திய பிர­தே­சம், பஞ்­சாப், லட்­சத்­தீவு மற்றும் புதுச்­சேரி ஆகிய மாநில மக்­க­ளுக்கு எனது வாழ்த்­து­கள்," என்று அதி­பர் ராம்­நாத் கோவிந்த் குறிப்­பிட்டு உள்­ளார்.

"இந்த மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­களில் வசிப்­ப­வர் ­க­ளின் ஒளி­ம­ய­மான எதிர்­கா­லத்­திற்­கா­க­வும் வாழ்த்­துகள்," என்றும் அவர் சொல்லியிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!