புதுடெல்லி: கிருமித்தொற்றுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் தொற்றுச் சம்பவங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. சென்ற சனிக்கிழமை 14,313 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஞாயிறு அன்று தினசரி கிருமித் தொற்று பாதிப்பு 12,830 ஆக குறைந்தது. நேற்று 24 மணி நேர நிலவரப்படி தொற்றுப் பாதிப்பு 12,514 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கிருமிப் பாதிப்புக்கு 251 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் கிருமித் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,58,186 லிருந்து 4,58,437ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 12,718 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,55,842லிருந்து 3,36,68,560ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.20% ஆகவும் உயிரிழப்பு விகிதம் 1.34% ஆகவும் உள்ளது.