பிரதமர் மோடி: இந்தியா மட்டுமே அளித்த வாக்குறுதியைக் கடைப்பிடிக்கும் ஒரே நாடு

கிளாஸ்கோ: பரு­வ­நிலை பாது­காப்பு தொடர்­பாக அளிக்­கும் வாக்­கு­றுதி­களை நிறை­வேற்­றும் நாடாக இந்­தியா மட்­டுமே உள்­ளது என பிர­த­மர் மோடி (படம்) கூறி­யுள்­ளார்.

பரு­வ­நிலை மாறு­பாடு மாநாட்­டில் பங்­கேற்க ஸ்காட்­லாந்து சென்­றுள்ள அவர், எதிர்­வ­ரும் 2070ஆம் ஆண்­டுக்­குள் கரி­ய­மில வாயு உமிழ்வை இந்­தியா நூறு விழுக்­காடு குறைத்து­விட வேண்­டும் என இலக்கு நிர்­ண­யித்­துள்­ள­தா­கக் கூறினார்.

"பாரீஸ் பரு­வ­நிலை மாறு­பாட்டு ஒப்­பந்­தத்­தில் கூறப்­பட்ட அம்­சங்­களைக் கடைப்­பி­டிக்­கும் ஒரே நாடு, அளித்த வாக்குறுதியைக் கடைப்­பி­டிக்­கும் ஒரே நாடு இந்­தியா என்­பதை உலக நாடு­கள் உணர்ந்து­விட்­டன.

"பாரீஸ் மாநாட்­டில் கூறப்­பட்­டுள்ள பல அம்­சங்­க­ளைக் கடைப்­பி­டிக்க நாங்­கள் தொடர்ந்து நட­வடிக்கை எடுத்து வரு­கி­றோம்," என்று மாநாட்­டில் பேசி­ய­போது பிர­த­மர் மோடி தெரி­வித்­தார்.

உலக மக்­கள் தொகை­யில் இந்­தி­யா­வின் பங்கு 17 விழுக்­காடு என்ற போதி­லும் கரி­ய­மில வாயு உமிழ்­வில் இந்­தி­யா­வின் பங்­க­ளிப்பு ஐந்து விழுக்­கா­டு­தான் என்று குறிப்­பிட்ட அவர், இதைக் குறைக்க வேண்­டும் என்ற தனது கட­மை­யில் இந்­தியா உறு­தி­யாக உள்­ளது என்­றார்.

பரு­வ­நிலை மாறு­பாட்­டைக் குறைக்க நிதி அளிப்­ப­தில் இருந்து வளர்ச்சி அடைந்த நாடு­கள் பின்­வாங்­கக் கூடாது என்று குறிப்­பிட்ட அவர், இது தொடர்­பான வாக்­கு­று­தியை அவை நிறை­வேற்ற வேண்­டும் என்­றார்.

இதற்­கி­டையே இந்­தி­யா­வுக்கு வருகை தரு­மாறு பிர­த­மர் மோடி விடுத்த அழைப்பை ஏற்­றுக்கொள்­வ­தாக பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் தெரி­வித்­துள்­ளார். சூழ்­நிலைக்­கேற்ப அவ­ரது பய­ணம் மிக விரை­வில் திட்­ட­மி­டப்­படும் என அவ­ரது தரப்­பில் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!