லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரயில் நிலையங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக லஷ்கர்-இ-தொய்பா பெயரில் விடுக்கப்பட்ட மிரட்டல் காரணமாக அம்மாநிலத்தில் பதற்றம் நிலவியது.
மொத்தம் 46 ரயில் நிலையங்களைக் குறிவைத்திருப்பதாக அந்த பயங்கரவாத அமைப்பின் தளபதி பெயரில் அம்மாநில அதிகாரிகளுக்கு கடிதம் வந்துள்ளது.
இதையடுத்து, அம்மாநிலம் முழுவதும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. லக்னோ, அயோத்தி, கான்பூர், வாரணாசி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் மிரட்டல் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மிரட்டலை ஒட்டி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் இத்தகைய மிரட்டல்கள் வருவது வாடிக்கைதான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.