மருத்துவமனையில் தீப்பிடித்து நான்கு பச்சிளம் குழந்தைகள் பலி

போபால்: இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள அரசு மருத்துவனை ஒன்றில் நேற்று திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பச்சிளம் குழந்தைகள் மாண்டுபோயினர்.


கமலா நேரு குழந்தைகள் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் சிறப்புப் பராமரிப்புப் பிரிவில் தீ விபத்து நிகழ்ந்தது. மின்சுற்றில் ஏற்பட்ட பிரச்சினையால் தீப்பிடித்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.


அப்பிரிவில் மீட்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைகள், மற்ற பிரிவுகளுக்கு மாற்றப்பட்டன.


தீவிர சிகிச்சைப் பிரிவு அமைந்துள்ள மூன்றாம் தளத்தில் இரவு 9 மணியளவில் தீப்பிடித்தது. அதனைத் தொடர்ந்து, 8-10 தீயணைப்பு வண்டிகள் அம்மருத்துவமனைக்கு விரைந்தன.


பிறந்த குழந்தைகளைப் பறிகொடுத்த அதிர்ச்சியில் பெற்றோர்கள் மாடிப்படிகளிலேயே அமர்ந்து கதறியழுததைப் படங்கள் காட்டின.


இந்நிகழ்வு மிகவும் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், தீவிபத்து குறித்துச் சுகாதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் விசாரித்து, அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.


இறந்த குழந்தைகளின் குடும்பத்தினர்க்குத் தலா நான்கு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!