மும்பை: உல்லாசக் கப்பலில் போதைப் பொருள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், போதைப் பொருள் உட்கொண்டதாகவும் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
இரண்டு வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மும்பை உயர் நீதிமன்றம் பிணை வழங்கியதால் அவர் தற்போது வெளியில் உள்ளார்.
இதற்கிடையே போதைப் பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதன் தொடர்பில் ஷாருக்கானின் பெண் மேலாளர் பூஜா தத்லானிக்கு மும்பை போலிசார் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.