விண்ணை முட்டிய வேட்டுச் சத்தம்

தீபாவளி திரும்ப வந்ததைப் போன்றதொரு கொண்டாட்டம்

புது­டெல்லி: மூன்று வேளாண் சட்­டங்­கள் திரும்­பப் பெறப்­ப­டு­வ­தாக பிர­த­மர் மோடி அறி­வித்­த­தைத் தொடர்ந்து போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரும் விவ­சா­யி­கள் இனிப்பு வழங்­கி­யும் பட்­டாசு வெடித்­தும் மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­தி­னர். ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் வாழ்த்­து­

க­ளைப் பரி­மா­றிக்­கொண்­ட­னர். 'கிசான் ஜிந்­தா­பாத்' (விவ­சாயி வாழ்க) முழக்­கம் போராட்­டக் களம் முழு­வ­தும் ஓங்கி ஒலித்­தது. தீபா­வ­ளிப் பண்­டி­கைக்கு வெடித்­த­தை­விட நேற்று வெடிக்­கப்­பட்ட பட்­டா­சு­கள் விண்ணை முட்­டின.

வேளாண்­து­றை­யில் மூன்று புதிய சட்­டத் திருத்­தங்­களை ஆளும் பாஜக அரசு கடந்த ஆண்டு நாடா­ளு­மன்­றத்­தில் கொண்டு வந்­தது. விலை உறுதி மற்­றும் பண்­ணைச் சேவை­கள் சட்­டம் 2020, வேளாண்மை உற்­பத்தி வர்த்­த­கம் மற்­றும் வர்த்­தக மேம்­பாட்­டுச் (ஊக்கு­விப்பு மற்­றும் வசதி) சட்­டம் 2020, அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் திருத்­தச் சட்­டம் 2020 ஆகிய மூன்று சட்­டங்­களும் விவ­சா­யி­களை வஞ்­சிக்­கும் சட்­டங்­கள் என்­பது எதிர்க்­கட்­சி­க­ளின் வாதம்.

சட்­டங்­களை ஏற்க பல மாநில விவ­சா­யி­கள் தயா­ராக இல்லை. குறிப்­பாக பஞ்­சாப், ஹரி­யானா, ராஜஸ்­தான், உத்­த­ர­பி­ர­தேச மாநில விவ­சா­யி­கள் டெல்­லியை நோக்கி படை­யெ­டுத்­த­னர்.

கடந்த ஆண்டு நவம்­பர் 25ஆம் தேதி டெல்லி சலோ என்ற முழக்­கத்­து­டன் தலை­ந­கர் டெல்­லிக்கு படை­யெ­டுத்­துச் சென்­ற­னர்.

2020 நவம்­பர் 26 நாளன்று விவ­சா­யி­கள் அனை­வ­ரும் டெல்லி எல்­லை­களில் தடுத்து நிறுத்­தப்­பட்­ட­னர். விவ­சா­யி­கள் மீது தடி­யடி நடத்­தப்­பட்­டது.

அதன் பின்­னர் விவ­சா­யி­க­ளு­டன் நடத்­தப்­பட்ட பல­கட்­டப் பேச்சு­ வார்த்தை தோல்­வி­யில் முடி­வ­டைந்­த­தால் 11 மாதங்­க­ளைக் கடந்து போராட்­டம் நீடித்து வந்­தது. இந்­நி­லை­யில் பிர­த­மர் மோடி­யின் அறி­விப்பு வெளி­யாகி உள்­ளது.

போராட்டம் தொடரும்

என அறிவிப்பு

மோடி­யின் அறி­விப்­புக்­குப் பின்­னர், டெல்­லி­யில் போரா­டும் விவ­சாய சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்புத் தலை­வர் ராகேஷ் திகா­யத் அடுத்த கட்ட நட­வ­டிக்கை தொடர்­பாக விளக்­கம் அளித்­தார். 'இந்­தியா டுடே' தொலைக்­காட்­சிக்கு அவர் அளித்த பேட்­டி­யில், "நாடா­ளு­மன்­றத்­தில் மூன்று விவ­சாய சட்­டங்­களும் ரத்து செய்­யப்­பட்ட பின்­னரே போராட்­டங்­களைக் கைவி­டு­வது தொடர்­பாக முடி­வெ­டுப்­போம். அது வரை காத்­தி­ருக்­கப்போகி­றோம். அந்த நாள் தான் எங்­க­ளுக்கு வர­லாற்று வெற்றி கிடைத்த நாளாக அமை­யும். விவ­சா­யி­கள் சந்திக்கும் பிரச்­சி­னை­கள் குறித்து விரிவாக விவா­திக்க வேண்­டி­யி­ருக்­கிறது," என கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!