துறைமுகம் நிர்மாணிக்கும் ஒப்பந்தம்: சீன நிறுவனத்துக்கு வழங்கிய இலங்கை அரசு

புது­டெல்லி: ஆழ்­க­டல் கொள்­க­லன் கையா­ளும் துறை­மு­கம் ஒன்றை நிர்­மா­ணிக்­கும் ஒப்­பந்­தத்தை சீனா­வைச் சேர்ந்த நிறு­வ­னத்­துக்கு வழங்கி உள்­ளது இலங்கை அரசு.

இதன்­வழி இந்­தி­யப் பெருங்­க­டல் பகு­தி­யில் சீனா­வின் ஆதிக்­கம் மேலும் அதி­க­ரிப்­பது இந்­தி­யா­வுக்­கும் அமெ­ரிக்­கா­வுக்­கும் கவ­லையை ஏற்­ப­டுத்­தும் என பாது­காப்பு நிபு­ணர்­கள் கரு­து­கின்­ற­னர்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஆழ்­கடல் கொள்­க­லன் துறை­மு­கத்தை நிர்­மா­ணிப்­ப­தற்­கான ஒப்­பந்­தத்தை முத­லில் இந்­தியா, ஜப்­பா­னு­டன்­தான் செய்துகொண்­டது இலங்கை அரசு. எனி­னும் கடந்த பிப்­ர­வரி மாதம் கோத்­தா­பய ராஜ­பக்சே நிர்­வா­கம், அதை ரத்து செய்­தது.

இந்­நி­லை­யில், அதே ஒப்­பந்­தம் தற்­போது சீன அரசு சார்பு நிறு­வ­னத்­துக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தத் திட்­டத்­தின் மொத்த மதிப்பு குறித்து அதி­கா­ர­பூர்வ தகவல் இல்லை. எனி­னும் சுமார் ஐநூறு மில்­லி­யன் அமெ­ரிக்க டால­ராக இருக்­கும் என கணக்­கி­டப்­பட்­டுள்­ளது.

இலங்­கை­யின் உள்­கட்­ட­மைப்­புத் திட்­டங்­களில் பல பில்­லி­யன் டாலர்­களை சீன நிறு­வ­னங்­கள் முத­லீடு செய்­துள்­ளன. மேலும், சீன அர­சும் கடந்த சில ஆண்­டு­களில் இலங்கை அர­சுக்கு மிகப்­பெ­ரிய அள­வில் கடன் அளித்து வந்­துள்­ளது.

இவ்­வாறு பெறப்­பட்ட கடன்­களைத் திருப்­பிச் செலுத்த முடி­யாத இலங்கை அரசு, அதற்கு ஈடாக, கடந்த 2017ஆம் ஆண்டு ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை 1.2 பில்­லி­யன் அமெ­ரிக்க டால­ருக்கு சீன நிறு­வ­னத்­தி­டம் 99 வருட குத்­தகைக்கு ஒப்­ப­டைத்­தது.

கடந்த 16 ஆண்­டு­களில் ராஜ­பக்சே தரப்­பின் கீழ் அமைந்த இலங்கை அர­சாங்­கம், சீனா­வுக்கு அர­சி­யல் ரீதி­யில் முக்­கி­யத்­து­வம் அளித்து வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!