பெங்களூரு: பெங்களூரு நகரில் 90 கிலோமீட்டர் தூரத்துக்கு வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இதற்காக ரூ.900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார் அவர்.
அண்மையில் பெய்த கனமழையால் பெங்களூரில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, பெங்களூரில் ஏற்கெனவே உள்ள 842 கிலோமீட்டர் நீளமுள்ள வடிகால் கட்டமைப்பை மேலும் அகலப்படுத்தவும் மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டமைப்பு பணி குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவடையும் என்றும் இதற்காக ஒப்பந்த அடிப்பையில் 137 பொறியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் பசவராஜ் தெரிவித்தார்.