கங்கனா: என்னைக் கொன்றிருக்கக்கூடும்

சண்­டி­கர்: பஞ்­சாப் மாநி­லத்­துக்­குச் சென்ற நடிகை கங்­கனா ரணா­வத்­துக்கு அங்­குள்ள விவ­சா­யி­கள் எதிர்ப்பு தெரி­வித்­த­னர்.

நேற்று முன்­தி­னம் ரோப்­பர் என்ற பகு­தி­யில் கங்­கனா காரில் சென்று கொண்­டி­ருந்­த­போது விவ­சா­யி­கள் மறி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

கங்­க­னா­வின் காரை தடுத்து நிறுத்­திய விவ­சா­யி­கள், அவ­ருக்கு எதி­ராக முழக்­கங்­களை எழுப்­பி­னர்.

இந்­நி­லை­யில், காவல்­து­றை­யி­னர் விரைந்து வந்து மறி­யல் நடத்­தி­ய­வர்­களை அப்­பு­றப்­ப­டுத்தி கங்­க­னா­வின் கார் செல்ல வழி ஏற்­ப­டுத்­தி­னர்.

இது­கு­றித்து பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய கங்­கனா, காவல்­து­றை­யி­னர் வந்­தி­ருக்­கா­விட்­டால், தன் காரை வழி­ம­றித்­த­வர்­கள் தம்மை அடித்­துக் கொன்­றி­ருக்­கக் கூடும் என்­றார்.

முன்­ன­தாக, வேளாண் சட்­டங்­க­ளுக்கு எதி­ரா­கப் போரா­டிய விவ­சா­யி­களை காலிஸ்­தான் அமைப்­பி­ன­ரு­டன் ஒப்­பிட்­டி­ருந்­தார் நடிகை கங்­கனா. இதற்கு கடும் கண்டனம் எழுந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!