இந்தியா, ரஷ்யா இடையே ரூ.5,200 கோடிக்கு ஒப்பந்தம்

புது­டெல்லி: இந்­தியா, ரஷ்யா பங்­கேற்ற 21ஆவது உச்ச மாநாட்டில் ரூ.5,200 கோடிக்­குப் பல்­வேறு முக்­கிய ஒப்­பந்­தங்­கள் நேற்று கையெழுத்­தா­கின.

இரு நாடு­க­ளுக்­கும் இடையே­யான உறவை மேலும் வலுப்­படுத்­தும் வகை­யில் இந்த உச்ச மாநாடு நடை­பெ­று­கிறது.

இந்த ஆண்டு பாது­காப்பு, வர்த்­த­கம், முத­லீடு, எரி­சக்தி, தொழில் நுட்­பம் உள்­ளிட்ட பல்­வேறு துறை­களில் புதிய ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

நேற்று முன்­தி­னம் இரவு இரு நாடு­க­ளின் வெளி­யு­றவு, பாது­காப்பு அமைச்­சர்­கள் முதற்­கட்­ட­மாக சந்­தித்­துப் பேசி­னர்.

அப்­போது இரு தரப்­புக்­கும் இடையே ரூ.5,200 கோடிக்கு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கின. ராணு­வம், சரக்­குப் போக்­கு­வ­ரத்து உள்­ளிட்ட துறை­களில் பல்­வேறு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தான நிலை­யில், ரஷ்ய தயா­ரிப்­பான நவீன ரக ஏ.கே.203 தானி­யங்கித் துப்­பாக்­கி­களை இந்­திய ராணு­வத்­துக்கு வாங்­கு­வ­தற்­கான முக்­கிய ஒப்­பந்­த­மும் கையெ­ழுத்­தா­ன­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்றன.

புதிய ஒப்­பந்­தத்­தின்­படி ரஷ்யா­வி­டம் இருந்து சுமார் ஆறு லட்­சம் துப்­பாக்­கி­களை இந்­தியா வாங்­கு­கிறது. அடுத்த பத்து ஆண்­டு­களுக்­குள் இந்­தத் துப்­பாக்­கி­கள் வாங்­கப்­படும்.

மேலும், ரஷ்ய தொழில்­நுட்­பத்தை மட்­டும் பயன்­ப­டுத்தி உள்­நாட்­டி­லேயே இந்த துப்­பாக்கி உற்­பத்தி மேற்­கொள்­ளப்­படும் எனத் தெரி­கிறது. நேற்று மாலை பிர­த­மர் மோடியைச் சந்­தித்­துப் பேசி­னார் ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்டின்.

அப்­போது, ஆப்­கா­னிஸ்­தான் விவ­கா­ரம், தீவி­ர­வாத அச்­சு­றுத்­தலுக்­கான வாய்ப்பு ஆகி­யவை குறித்­தும் விரி­வாக விவா­திக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!