ஓமிக்ரான் தொற்றால் மூன்றாவது அலை பேரளவில் ஏற்படும்

இந்திய மருத்துவ சங்கம்: உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்க

புது­டெல்லி: ஓமிக்­ரான் தொற்று மெல்ல அதி­க­ரித்து வரும் நிலை­யில் உரிய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளா­விட்­டால், இந்­தி­யா­வில் மூன்­றா­வது அலை ஏற்­படும் என்று இந்­திய மருத்­துவச் சங்­கம் எச்­ச­ரித்­துள்ளது.

தற்­போது நாட்­டில் 23 பேர் ஓமிக்­ரான் பாதிப்­புக்கு ஆளா­கி­யுள்­ள­னர்.

இந்நிலையில் அறி­வி­யல்­பூர்­வ­மான ஆதா­ரங்­கள், இந்­தப் பாதிப்பு தோன்­றி­ய­தா­கக் கரு­தப்­படும் நாடு­கள் எதிர்­கொண்ட அனு­ப­வங்­கள் ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் பார்க்­கும்­போது, ஓமிக்­ரான் தொற்று அதி­க­மா­னோரை தாக்­கும் என்­பது தெரிய வரு­வ­தாக அச்­சங்­கம் கூறி­யுள்­ளது.

"இந்­தியா இயல்புநிலைக்கு திரும்­பிக் கொண்­டி­ருக்­கும் வேளை­யில், ஓமிக்­ரான் பாதிப்பு பெரும் பின்­ன­டை­வாக அமைந்­துள்­ளது.

"எனவே உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வில்லை எனில் மிகப்­பெ­ரிய அள­வி­லான மூன்­றா­வது அலை ஏற்­படும்," என இந்­திய மருத்­துவ சங்­கம் எச்­ச­ரித்­துள்­ளது.

எனவே 12 முதல் 18 வய­தான சிறார்­கள், பதின்ம வய­தி­ன­ருக்கு தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கையை வேகப்­ப­டுத்த வேண்­டும் என்­றும் அச்­சங்­கம் வலி­யு­றுத்தி உள்­ளது.

மேலும், சுகா­தார, முன்­க­ளப் பணி­யா­ளர்­கள், நோய் எதிர்ப்பு சக்தி குறை­வாக உள்­ள­வர்­களுக்கு பூஸ்­டர் ஊசி போடு­வது குறித்து மத்­திய அரசு உட­ன­டி­யாக அறி­விக்க வேண்­டும் என வேண்டு­கோள் விடுப்­ப­தா­க­வும் மருத்­துவ சங்­கம் கூறி­யுள்­ளது.

இந்­நி­லை­யில் ஓமிக்­ரான் பாதிப்பு அதி­க­ரிக்­கும் பட்­சத்­தில் நாட்­டில் கொரோனா மூன்­றா­வது அலை தோன்­றும் வாய்ப்­புள்­ள­தாக இந்­திய தொழில்­நுட்ப கல்வி நிறு­வ­னத்­தின் (ஐஐடி) விஞ்­ஞானி மனீந்­தர் அகர்­வா­லும் எச்­ச­ரித்­துள்­ளார்.

எனி­னும் இரண்­டா­வது அலை­யால் ஏற்­பட்ட பாதிப்­பை­விட மூன்­றாம் அலை­யின் தாக்­கம் குறை­வாக இருக்­கும் என்று கணித்­துள்ள அவர், மூன்­றா­வது தொற்று அலை உச்­சத்தை எட்டும்­போது, நாள்­தோ­றும் 150,000 பேர் வரை பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்­கி­றார்.

எனி­னும் இரண்­டா­வது அலை­யால் ஏற்­பட்ட பாதிப்­பை­விட மூன்­றாம் அலை­யின் தாக்­கம் குறை­வாக இருக்­கும் என்று கணித்­துள்ள அவர், மூன்­றா­வது தொற்று அலை உச்­சத்தை எட்டும்­போது, நாள்­தோ­றும் 150,000 பேர் வரை பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்­கி­றார்.

இந்­தி­யா­வில் இது­வரை 23 பேருக்கு ஓமிக்­ரான் பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. ஆக அதி­க­மாக மகா­ராஷ்­டி­ரா­வில் 10 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

ராஜஸ்­தா­னில் ஒன்­பது பேர், கர்­நா­ட­கா­வில் இரு­வர், குஜ­ராத், டெல்­லி­யில் தலா ஒரு­வ­ருக்கு ஓமிக்­ரான் பாதிப்பு இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

தொற்று அபா­ய­முள்ள நாடு­களில் இருந்து வரும் பய­ணி­க­ளுக்கு, விமான நிலை­யத்­தி­லேயே பரிசோ­தனை, அதன் பின்­னர் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­தல் உள்­ளிட்ட புதிய கட்­டுப்­பா­டு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

இதற்­கி­டையே, வெளி­நா­டு­களில் இருந்து ம­கா­ராஷ்­டிரா திரும்­பிய நூற்­றுக்­கும் மேற்­பட்ட பயணி­கள் எங்கு உள்­ள­னர் என்­பதை கண்­ட­றிய முடி­யா­மல் அதி­கா­ரி­கள் தவிப்­புக்கு ஆளா­கி­உள்­ள­னர். அவர்­கள் அளித்­துள்ள முக­வ­ரி­கள் போலி­யா­னவை எனத் தெரி­ய­வந்­துள்­ளது.

டிசம்­பர் 5ஆம் தேதி வரை தொற்று அபா­ய­முள்ள நாடு­களில் இருந்து மும்­பைக்கு 4,480 பேர் வந்­துள்­ள­னர்.

மாயமானவர்களை தேடிப் பிடிக்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!