25 விமான நிலையங்கள் தனியார்மயம்

2025க்குள் கைமாற்ற இந்திய அரசு திட்டம்; சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகர்களும் அடங்கும்

புது­டெல்லி: வரும் 2025ஆம் ஆண்­டிற்­குள் மொத்­தம் 25 விமான நிலை­யங்­க­ளைத் தனி­யா­ரி­டம் ஒப்­ப­டைக்க இந்­திய அர­சாங்­கம் திட்­ட­மிட்­டுள்­ள­தாக விமா­னப் போக்­கு­வரத்து இணை அமைச்­சர் வி.கே.சிங் தெரி­வித்­துள்­ளார்.

சொத்­து­களை விற்­றுப் பண­மாக்­கும் திட்­டத்­தின்­கீழ் மத்­திய அரசு இதைச் செய்து முடிக்­க­வி­ருக்­கிறது.

இதன்­படி, தமிழ்­நாட்­டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நக­ரங்­களில் உள்ள அனைத்­து­லக விமான நிலை­யங்­கள் தனி­யார்­வ­ச­மா­கி­வி­டும்.

அவற்­று­டன், நாக்­பூர், வார­ணாசி, டேரா­டூன், இந்­தூர், கோழிக்­கோடு, புவ­னேஸ்­வர், பாட்னா, திருப்­பதி, ராஞ்சி, ஜோத்­பூர், ராய்ப்­பூர், ராஜ­முந்­திரி, வதோ­தரா, அமிர்­த­ச­ரஸ், சூரத், ஹூப்ளி, இம்­பால், அகர்­தலா, உதய்ப்­பூர், போபால், விஜ­ய­வாடா ஆகிய நகர்­களில் உள்ள விமான நிலை­யங்­களும் தனி­யா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும்.

ஆண்­டிற்கு 400,000 பய­ணி­களுக்­கு­மேல் கையா­ளும் விமான நிலை­யங்­கள் அனைத்­தை­யும் தனி­யார்­ம­ய­மாக்­கும் திட்­டத்­திற்­குத் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ள­தாக வி.கே.சிங் கூறி­னார்.

அடுத்த நான்கு ஆண்­டு­க­ளுக்­குள் இந்த 25 விமான நிலை­யங்­களை­யும் தனி­யார்­ம­ய­மாக்­கு­வ­தன்­மூ­லம் ரூ.20,782 கோடி திரட்­ட திட்­ட­மிட்­டுள்­ள­தாக மத்­திய அரசு முன்­ன­தா­கத் தெரி­வித்­தி­ருந்­தது.

கடந்த 2020-21 நிதி­யாண்­டில், இந்­தி­யா­வில் உள்ள 136 விமான நிலை­யங்­க­ளி­லும் ஒட்­டு­மொத்­த­மாக ரூ.2,882.74 கோடி வருவாய் இழப்பு ஏற்­பட்­ட­தா­கத் தர­வு­கள் கூறு­கின்­றன.

ஆக அதி­க­மாக, மும்பை சத்­ர­பதி சிவாஜி மக­ராஜ் அனைத்­து­லக விமான நிலை­யத்­திற்கு ரூ.384.81 கோடி­யும் புது­டெல்லி இந்­திரா காந்தி அனைத்­து­லக விமான நிலை­யத்­திற்கு ரூ.317.41 கோடி­யும் இழப்பு ஏற்­பட்­டன.

மும்பை விமான நிலை­யத்­தின் 74% பங்கு அதானி குழு­மத்­தி­ட­மும் எஞ்­சிய 26% பங்கு இந்­திய விமான நிலைய ஆணை­யத்­தி­ட­மும் உள்­ளன.

சென்னை, திரு­வ­னந்­த­பு­ரம், அக­ம­தா­பாத் ஆகி­யவை அதிக இழப்­பைச் சந்­தித்த அடுத்த மூன்று விமான நிலை­யங்­கள்.

கண்­டாலா, கான்­பூர் சக்­கேரி, பரேலி, போர்­பந்­தர் ஆகிய நான்கு விமான நிலை­யங்­கள் மட்­டும் லாபம் காட்­டின.

இந்நிலையில், இப்­போ­துள்ள விமான நிலைய முனை­யங்­களை விரி­வாக்­கம் செய்­தல், மாற்­றி­ய­மைத்­தல், புதிய முனை­யங்­க­ளைக் கட்­டு­தல், ஓடு­பா­தை­களை விரி­வு­படுத்­தல் அல்­லது வலுப்­ப­டுத்­தல், கட்டுப்பாட்டுக் கோபுரங்கள் உள்­ளிட்ட பணி­க­ளுக்­காக விமான நிலைய ஆணை­யம் அடுத்த ஐந்து ஆண்­டு­களில் ரூ.25,000 கோடி­யைச் செல­வி­டும் என்று வி.கே.சிங் நேற்று முன்­தி­னம் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

வழக்கமான அனைத்துலக விமான சேவைகள் ஜனவரி 31 வரை ரத்து

இத­னி­டையே, வழக்­க­மான அனைத்­து­லக விமா­னப் போக்­கு­வ­ரத்து சேவை­களை 2022 ஜன­வரி 31ஆம் தேதி­வரை நிறுத்தி வைப்­ப­தாக சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து தலைமை இயக்­க­கம் அறி­வித்­து இருக்கிறது.

முன்­ன­தாக, இம்­மா­தம் 15ஆம் தேதி­யி­லி­ருந்து அனைத்­து­லக விமான சேவை­கள் வழக்­கம்­போல் தொடங்­கும் என்று அறி­விக்­கப் பட்­டது. ஆனால், 'ஓமிக்­ரான்' கிருமி அச்­சு­றுத்­தல் கார­ண­மாக, அத­னைத் தள்­ளி­வைப்­ப­தாக அடுத்த ஒரு வாரத்­தி­லேயே அறி­விப்பு வெளி­யா­னது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!