உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணா பகிரங்க குற்றச்சாட்டு கோவேக்சின் தடுப்பூசிக்கு பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்ப்பு

ஹைதராபாத்: இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியான கோவேக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளிப்பதை சில தரப்பினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குற்றம்சாட்டி உள்ளார்.

ஹைத­ரா­பா­த்தில் நடை­பெற்ற அறக்­கட்­டளை விருது வழங்­கும் நிகழ்­வில் பங்­கேற்­றுப் பேசிய அவர், ஃபைசர் போன்ற பன்­னாட்டு நிறு­வ­னங்­களும் இந்­தி­யா­வைச் சேர்ந்த தனி நபர்­கள் பல­ரும் கோவேக்சினுக்கு உலக சுகா­தார அமைப்பு அங்­கீ­கா­ரம் அளித்து­விடக் கூடாது என்­ப­தற்­காக பல்­வேறு தீவிர நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்டார்.

கோவேக்­சின் தடுப்­பூ­சி­யின் ஆற்­ற­லைக் குறைத்து மதிப்­பிட்­டும் அதன் வீரி­யம் நீண்ட நாள்­க­ளுக்கு நீடிக்­காது என்­றும் எதிர்த் தரப்­பி­னர் பொய் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­டுள்­ள­தாகக் தெரி­வித்த தலைமை நீதி­பதி ரமணா, பல பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் மேற்­கொண்­டுள்ள இத்­த­கைய முயற்சி முறி­ய­டிக்­கப்­பட வேண்­டும் என்­றார்.

"இந்­தி­யா­வில் தயா­ரிக்கப்பட்ட கொரோனா தடுப்­பூசி மருந்துக்கு உல­க­ள­வில் அங்­கீ­கா­ரம் கிடைப்­பதை அந்­தப் பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளால் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. அத­னால் கோவேக்சி­னுக்கு முட்­டுக்­கட்டை போடும் நட­வ­டிக்­கை­களில் அவை ஈடு­பட்­டுள்­ளன," என்று தலைமை நீதி­பதி ரமணா மேலும் தெரி­வித்­தார்.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் இந்தப் பகிரங்கமான குற்றச்சாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!