ரூ.25 வேர்க்கடலை கடனை ரூ.25,000 ஆக அடைத்த இளையர்

தான் சிறுவனாக இருந்தபோது பெற்ற 25 ரூபாய்க்கான வேர்க்கடலை கடனை 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.25,000 ஆக திருப்பி அடைத்துள்ளார் பிரவீண் என்ற இளையர்.

இந்தியாவின் ஆந்திர மாநிலம், காக்கி நாடாவைச் சேர்ந்தவர் மோகன். கடந்த 2010ல் காக்கி நாடா கடற்கரைக்கு அவர் சென்றிருந்தார்.

அப்போது, அவரது மகன் பிரவீண், சைக்கிளில் வேர்க்கடலை விற்றுக்கொண்டு இருந்த வேத சத்தைய்யா என்பவரிடம் ரூ.25க்கு வேர்க்கடலை வாங்கினார்.

ஆனால், பிரவீணின் தந்தையிடம் பணம் இல்லாததால் வேர்க்கடலை பொட்டலங்களைத் திருப்பிக் கொடுக்க, “நாளைக்கு பணம் கொடுங்கள்,” என்று கூறினார் வேதசத்தையா.

அடுத்த நாள் தந்தையும் மகனும் கடற்கரைக்குச் சென்றபோது வேத சத்தையாவைக் காணவில்லை.

அதன்பிறகு குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுவிட்டார் மோகன். இப்போது காக்கி நாடாவுக்கு வந்துள்ள நிலையில், கடற்கரையில் வேதசத்தையாவைத் தேடியுள்ளனர் மோகன் குடும்பத்தார்.

இந்நிலையில், வேதசத்தையா இறந்துவிட்டதாக சிலர் கூற, அவரது மனைவியிடம் வேர்க்கடலை கடனை ரூ.25,000 ஆக திருப்பி ஒப்படைத்துள்ளார் பிரவீண்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!