சொல்பேச்சு கேளாத ஓட்டுநருக்கு 190 ஆண்டுகள் சிறை

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பேருந்து விபத்தில் 22 பயணிகள் உயிரிழக்க காரணமாக இருந்த பேருந்து ஓட்டுநருக்கு 190 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்திற்கு காரணமான பேருந்து ஓட்டுநருக்கு இந்தியாவில் இவ்வளவு ஆண்டுகாலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

கடந்த 2015ல் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து தீப்பிடித்தது.

இதையடுத்து, அவசர நேரத்துக்கு உதவும் கதவின் வழி பயணிகள் வெளியேற முயன்றனர். ஆனால், அந்தக் கதவில் இரும்புக் கம்பி பொருத்தப்பட்டு இருந்ததால் பயணிகளால் அதைத் திறக்க முடியவில்லை.

இந்நிலையில், பேருந்தில் பயணம் செய்த 65 பேரில் 22 பேர் தீயில் கருகி மாண்டனர். ஏராளமானோர் தீக்காயம் அடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், “பேருந்தை மெதுவாக இயக்கும்படி பயணிகள் கூறினர். ஆனால், பேருந்து ஓட்டுநர் ஷம்சுதீன், 47, பயணிகள் எவ்வளவு சொல்லியும் அதைக் கேட்கவில்லை.

“பேருந்தை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார் ஷம்சுதீன். பயணிகளின் பேச்சைக் கேட்டிருந்தால் விபத்தில் 22 பேர் மரணம் அடைந்திருக்க மாட்டார்கள்,” என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கூறினார்.

அவசர நேரத்தில் பேருந்தை விட்டு வெளியேறுவதற்கான கதவை அடைத்து பேருந்தில் கூடுதல் இருக்கைகள் அமைத்திருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, ஓட்டுநர் ஷம்சுதீனுக்கு 19 குற்றப்பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் என மொத்தம் 190 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன், பேருந்தின் உரிமையாளர் ஜிதேந்திர பாண்டேவுக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!