இந்தியாவில் கிருமிப் பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் அச்சம் தற்காலிக மருத்துவமனைகளைத் தயார்நிலையில் வைக்கும்படி மத்திய அரசு வலியுறுத்து

புது­டெல்லி: இந்­தி­யா­வில் ஒரு­பு­றம் புதிய வகை ஓமிக்­ரான் கிரு­மிப் பர­வ­லும் மற்­றொ­ரு­பு­றம் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லும் கிடு­கி­டு­வென அதி­க­ரித்து வரு­கின்றன. வருங்­காலத்­தில் இந்­தப் பாதிப்பு மேலும் அதி­க­ரிக்­க­லாம் என­வும் அஞ்­சப்­படு­கிறது.

நேற்று முன்­தி­னம் நாடெங்­கும் 22,775 பேருக்கு கொரோனா பாதிப்பு உறு­தி­யான நிலை­யில், நேற்று புதி­தாக 27,553 பேரை இத்­தொற்று பீடித்­த­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

கடந்த 24 மணி நேரத்­தில் கொவிட்-19 தொற்­றால் 284 பேர் உயி­ரி­ழந்த நிலை­யில், இப்­பா­திப்­பில் இருந்து 9,249 பேர் மீண்டு வீடு திரும்­பி­னர்.

இதே­போல், நாட்­டில் ஓமிக்­ரான் பாதிப்பு எண்­ணிக்­கை­யும் 1,525 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

ஓமிக்­ரான் தொற்­றில் இருந்து 560 பேர் குண­ம­டைந்த நிலை­யில், 965 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

அதி­க­பட்­ச­மாக மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் 460 பேருக்­கும் தலை­ந­கர் டெல்­லி­யில் 351 பேருக்­கும் ஓமிக்­ரான் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்சு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், கொரோனா பாதிப்பு எண்­ணிக்கை உயர்ந்து வரு­வ­தால் தற்­கா­லிக மருத்­து­வ­மனை­களை அமைத்து மக்­க­ளுக்கு சிகிச்­சை­களை வழங்க முன்­கூட்­டியே தயார்­ப்ப­டுத்­திக் கொள்­ளும்­படி மாநி­லங்­களை மத்­திய அரசு கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

சுகா­தார உள்­கட்­ட­மைப்பு விரை­வில் அழுத்­தத்­துக்கு உள்­ளா­கும் ஆபத்து உள்­ள­தால் உயிர்­வாயு போதிய அள­வில் கிடைப்­ப­தைக் கண்­கா­ணிக்­கு­மா­றும் மாநி­லங்­களை மத்­திய அரசு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

மகா­ராஷ்­டி­ரா­வில் மீண்­டும் மின்­னல் வேகத்தில் கொரோனா பரவியதால் புதி­தாக 9,170 பேருக்கு பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­டது.

கொரோனா பரவலைத் தடுக்க இன்று 3ஆம் ேததி முதல் நாடெங்கும் உள்ள 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது.

இதனைத் தொடர்ந்து 28 நாள்களுக்குப் பிறகு இரண்டாவது தடுப்பூசி போடப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இதற்­கி­டையே, "உரு­மா­றிய ஓமிக்­ரான் தொற்று முக்­கி­ய­மாக நுரை­யீ­ரலைவிட மேல் சுவா­சப் பாதை, காற்­றுப்­பா­தை­களையே பாதிக்­கிறது. எனவே இணை நோய்­கள் இல்­லா­த­வர்­கள் பதற்றம் அ­டை­யா­மல் மருத்­து­வ­மனை படுக்­கை­க­ளைத் தவிர்க்­க­வேண்­டும், வீட்­டுத் தனி­மை­யில் இருந்து குண­ம­டையவேண்­டும்," என்று எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னைத் தலை­வர் ரந்­தீப் குலே­ரியா அறி­வு­றுத்தி உள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!