செய்­திக்­கொத்து

ஆப்கானுக்கு மேலும் ஐந்து லட்சம் கோவேக்சின் தடுப்பூசி நன்கொடை

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு மேலும் ஐந்து லட்சம் கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை மனிதாபிமான அடிப்படையில் இந்தியா இரண்டாவது கட்டமாக நன்கொடையாக வழங்கியுள்ளது. இவை காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டன.

இவற்றைத் தவிர மேலும் ஐந்து லட்சம் கொரோனா தடுப்பூசி அடுத்தடுத்த வாரங்களில் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட கடைசி பயங்கரவாதியும் மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட கடைசி பயங்கரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இரு நாள்களுக்கு முன்பு அனந்த்நாக் பகுதியில் காவல் துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதாகக் குறிப்பிட்டவர், மரபணு பரிசோதனையில் இறந்தவர் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய சமீர் தர் என்ற பயங்கரவாதிதான் என்பது உறுதியாகி உள்ளதாகக் கூறினார்.

கடந்த 2019ல் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) வீரர்கள் கொல்லப்பட்டனர்.

உத்தவ் தாக்கரே: 500 சதுர அடி வீடுகளுக்குச் சொத்து வரி ரத்து

மும்பை: மும்பையில் ஐந்நூறு சதுர அடி வரையிலான பரப்பளவில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்குச் சொத்து வரி கட்டத் தேவையில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை உடனடியாக நடப்புக்குக் கொண்டு வரும்படியும் நகர வளர்ச்சித் துறை அமைச்சர் ஏக்நாத் சிண்டேவுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், 16 லட்சம் குடும்பங்களுக்கு பயன் கிட்டும் என்றும் மும்பை மாநகராட்சித் தேர்தல் வருவதை முன்னிட்டு புத்தாண்டுப் பரிசாக சொத்துவரி தள்ளுபடியை முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

356 மீனவர்களை விடுவிக்கும்படி பாகிஸ்தானுக்கு அரசு வலியுறுத்து

புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும்போது கைது செய்யப்படுகின்றனர். இதுபோல், பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 356 இந்திய மீனவா்களையும் இதர இருவரையும் உடனடியாக விடுதலை செய்யும்படி பாகிஸ்தான் அரசுக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1, ஜூலை 1 ஆகிய தேதிகளில் சிறையிலிருக்கும் அந்தந்த நாட்டு கைதிகளின் பட்டியலைப் பரிமாறிக்கொள்ளும் நடைமுறையின்கீழ், இந்தக் கோரிக்கையை இந்தியா முன்வைத்துள்ளது.

ரூ.50 பணத்தை எடுத்ததற்காக மகனை அடித்துக் கொன்ற தந்தை

தானே: தனது பணப்பையில் இருந்து ரூ.50 பணத்தை எடுத்த 10 வயது மகனை கடும் ஆத்திரத்துடன் அடித்துக் கொன்ற தந்தையைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள கல்வா நகரில் வசிப்பவர் சந்தீப் பிரஜாபதி. இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இவரது மனைவி புத்தி சுவாதீனம் இல்லாதவர். சம்பவத்தன்று இவரது பணப்பையில் இருந்து 50 ரூபாயை மகன் எடுத்ததை அடுத்து, அவரை கண்மூடித்தனமாக சந்தீப் அடித்து தாக்கியதில் மகன் மயங்கி விழுந்தார். அவரை அப்படியே போர்வையில் சுருட்டி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அதன் பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவன் உயிர் இழந்ததாகக் கூறப்பட, சந்தீப் கைதானார்.

உ.பி.யில் கடுங்குளிர், பனிமூட்டத்தால் மக்கள் பாதிப்பு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் காலை நேரத்தில் கடுங்குளிருடன் பனிமூட்டமும் நிலவியதால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு மெதுவாகச் சென்றன.

பனிமூட்டத்தால் பாதைகளும் தெளிவாகத் தெரியாததால் வாகனமோட்டிகள் பெரும் சிரமப்பட்டனர்.

நாட்டின் வடமாநிலங்களில் கடுங்குளிருடன் வாடைக் காற்று வீசி வருகிறது. இதனால் உத்தரப்பிரதேசத்தில் லக்னோ, பிரயாக்ராஜ், கான்பூர், மொரதாபாத், அயோத்தி, வாரணாசி ஆகிய நகரங்களில் இரவிலும் காலையிலும் மக்கள் விறகுகளைக் கொண்டு தீமூட்டி குளிர்காய்ந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!