12ஆம் தேதி ‘ஓ’ நிலைத் தேர்வு முடிவுகள்

இம்­மா­தம் 12ஆம் தேதி 'ஓ' நிலைத் தேர்வு முடி­வு­கள் வெளி­யி­டப்­ப­ட­ உள்­ளன.

சுகா­தார அபாய எச்­ச­ரிக்கை (HRW) விடுக்­கப்­பட்­டுள்ள மாண­வர்­கள், 12ஆம் தேதி­யன்று 'ஏஆர்டி' பரி­சோ­தனை செய்து 'தொற்று இல்லை' என முடிவு வந்­தால் மட்டுமே, பள்­ளிக்கு நேரில் சென்று முடி­வு­க­ளைப் பெற அனு­ம­திக்­கப்­படு­வர்.

பிற்­ப­கல் 2 மணி­யில் இருந்து மாண­வர்­கள் தங்­க­ளது உயர்­நி­லைப் பள்­ளி­க­ளுக்கு நேரில் சென்று முடிவு­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

"முடி­வு­க­ளைப் பெறு­வ­தற்­கா­கச் செல்­லும் மாண­வர்­கள் மட்­டுமே பள்ளி வளா­கத்­திற்­குள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர். அப்­போது மாண­வர்­கள் நடப்­பி­லுள்ள பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­க­ளைப் பின்­பற்ற வேண்­டும்," என்று கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

உடல்­ந­ல­மில்­லாத அல்­லது கொவிட்-19 தொற்று கார­ண­மாக சுய­மா­கத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டி­ய­வர்­கள் பள்­ளிக்கு நேரில் சென்று முடி­வு­க­ளைப் பெற முடி­யாது.

மாறாக, 12ஆம் தேதி பிற்­ப­கல் 2.45 மணி­யில் இருந்து சிங்­கப்­பூர் தேர்வு மதிப்­பீட்­டுக் கழ­கத்­தின் இணை­யப்­பக்­கத்­தில் அவர்­கள் தங்­க­ளது முடி­வு­க­ளைப் பார்க்­க­லாம்.

சிங்­பாஸ் கணக்கு வைத்­தி­ருக்­கும் பள்ளி மாண­வர்­கள், இந்த மா­தம் 12ஆம் தேதி­யில் இருந்து 26ஆம் தேதி­வரை, அந்த இணை­யப்­பக்­கத்­திற்­குச் சென்று, முடி­வு­களைப் பார்த்­துக்­கொள்­ள­லாம்.

உயர்­நி­லைப் பள்­ளி­க­ளின் அனைத்­து­லக மாண­வர்­க­ளுக்கு, கணினி உரு­வாக்­கிய பய­னர் பெயர் அடங்­கிய மின்­னஞ்­சல் நாளை 7ஆம் தேதி­யில் இருந்து அனுப்­பப்­படும். அதைக்­கொண்டு, அவர்­கள் சிங்­கப்­பூர் தேர்வு மதிப்­பீட்­டுக் கழ­கத்­தின் இணை­யப்­பக்­கத்­தில் நுழை­ய­லாம்.

நேரில் சென்று முடி­வு­க­ளைப் பெற இய­லாத மாண­வர்­கள், அது­கு­றித்து தங்­கள் பள்­ளி­க­ளுக்­குத் தக­வல் தெரி­விக்­கும்­படி கல்வி அமைச்சு அறி­வு­றுத்தி இருக்­கிறது.

முடி­வு­க­ளைப் பெற்­றுக்­கொள்ள அவர்­கள் வேறொருவரை நிய­மிக்­க­லாம். அந்த நபர், முடி­வு­களைப் பெறு­முன் சரி­பார்ப்­பிற்­காக உரிய ஆவ­ணங்­க­ளைக் காட்ட வேண்­டும்.

தனித்­தேர்­வர்­கள் இம்­மா­தம் 12ஆம் தேதி முதல் அஞ்­சல் வழி­யாக முடி­வு­கள் அனுப்பி வைக்­கப்­படும். சிங்­பாஸ் கணக்கு வைத்­துள்ள தனித்­தேர்­வர்­கள், தேர்வு மதிப்­பீட்­டுக் கழக இணை­யப்­பக்­கம் வாயிலாகவும் முடி­வு­க­ளைத் தெரிந்து­கொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!