ஐடிஇ மாணவருக்கு எட்டு மாதச் சிறைத்தண்டனை

பெண்ணை வேண்­டு­மென்றே காயப்­ப­டுத்­திய குற்­றத்தை ஒப்­புக்­கொண்ட 24 வயது தொழில்­நுட்­பக் கல்­விக் கழக மாண­வ­ருக்கு நேற்று எட்டு மாதச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கடந்த 2020ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதம், இணை­யத்­த­ளச் சேவை வழி­யாக அப்­போது 37 வய­தான பெண் ஒரு­வ­ரு­டன் 'டேட்­டிங்' செல்ல முன்­ப­திவு செய்­தார் அந்­தச் சிங்­கப்­பூ­ரர்.

அதன்­படி, அவ்­வாண்டு அக்­டோ­பர் 26ஆம் தேதி அவ்­வி­ரு­வரும் 'டேட்­டிங்' சென்­ற­னர். அப்­போது, அப்­பெண்­ணு­டன் சேர்ந்து 'டிக்­டாக்' காணொளி எடுக்க விரும்­பி­ய­தா­கக் கூறிய அந்த ஆட­வர், அப்­பெண்ணை சாங்கி விமான நிலை­யத்­தின் நான்­காம் முனை­யத்­தில் உள்ள ஒரு கார்­நி­றுத்­தப் பூங்­கா­வின் நான்­காம் தளத்­தில் மாடிப்­ப­டி­கள் முடி­யும் இடத்­திற்கு அழைத்­துச் சென்­றார்.

அவ்­வாறு செல்­லும்­போ­தும் ஒவ்­வொரு தளத்­தி­லும் ஒரு­வ­ரும் இல்­லா­ததை அவர் உறு­திப்­ப­டுத்­திக்­கொண்­டார்.

குறிப்­பிட்ட இடத்தை அடைந்­த­தும், தங்­களை நோக்­கி­ய­வாறு அங்­கி­ருந்த தீய­ணைப்­பான்­மீது தமது கைப்­பே­சியை அவர் வைத்­தார்.

சுவரை நோக்கி திரும்பி நிற்­கும்­படி அப்­பெண்­ணி­டம் சொன்ன அவர், பின்­னர் அப்­பெண்­ணின் கழுத்தை இறுக்கி மயக்­க­மு­றச் செய்­தார்.

அப்­பெண் மயக்க நிலை­யில் இருந்­த­போது, அவ­ரி­டம் முறை­தவறி நடக்க நோக்­கம் கொண்­டார் அந்த ஆட­வர். ஆனால், அப்­பெண் நினைவு திரும்பி விழித்­துக்­கொள்­ளவே அவர் தமது எண்­ணத்­தைக் கைவிட்­டார்.

தண்­டனை விதிக்­கு­முன் அவர் மீதான மான­பங்­கக் குற்­றச்­சாட்­டும் கவ­னத்­தில் கொள்­ளப்­பட்­டது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பு கருதி, அந்த ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!