தினமும் 5 லட்சம் பேர் பாதிக்கும் சூழல் உள்ளதாக எச்சரிக்கை

புது­டெல்லி: இந்­தி­யா­வில் அடுத்த பிப்­ர­வரி மாதத்­தில் கொேரானா தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை உச்­சத்தை தொடக் கூடும் என அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த பிர­பல மருத்­துவ விஞ்­ஞானி கிறிஸ்­டோ­பர் முராரே எச்­ச­ரித்­துள்­ளார்.

இந்­தி­யா­வின் தனி­யார் செய்தி நிறு­வ­னத்­திற்கு அவர் அளித்த பேட்­டி­யில், தின­மும் ஐந்து லட்­சம் பேர் வரை தொற்­றால் பாதிக்­கப்­படும் சூழல் உள்­ள­தா­கக் கூறி­னார்.

அதே­வே­ளை­யில், கடந்த அலை­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், இப்­போது மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்­கை­யும் உயி­ரி­ழப்­பும் குறை­வா­கவே இருக்­கும் என்­றும் அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

இந்­தி­யா­வில் மூன்­றா­வது அலை யின் தாக்­கம் கார­ண­மாக, கொவிட்-19 தொற்­றால் ஏரா­ள மானோர் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

முதல் அலை­யின்­போது, கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை ஒரு லட்­சத்தை எட்ட 120 நாட்­கள் ஆனது. இரண்­டா­வது அலை­யில் 50 நாட்­கள் ஆகின.

ஆனால், இப்­போ­தைய மூன்­றா­வது அலை­யில் வெறும் 10 நாட்­களில் ஒரு லட்­சம் பேருக்­கும் மேல் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் ஓமிக்­ரான் பர­வல் கார­ண­மாக கொரோனா தொற்று மீண்­டும் வேக­மெ­டுக்­கத் தொடங்கி உள்­ள­தால், தடுப்­பூசி போடும் பணியை மத்­திய, மாநில அர­சு­கள் துரி­தப்­ப­டுத்தி வரு­கின்­றன.

நாடு முழு­வ­தும் நேற்று முன்­தி­னம் கொரோனா பாதிப்பு 117,100 ஆக பதி­வான நிலை­யில், நேற்று புதி­தாக 141,986 பேருக்கு இத் தொற்று உறு­தி­யா­னது. இது நேற்று முன்­தின பாதிப்பை விட 21% அதி­க­மா­கும்.

இதற்­கி­டையே, கொரோனா கூடு­தல் (பூஸ்­டர்) தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வ­தற்கு புதி­தாக முன்­ப­திவு செய்­ய­வேண்­டி­ய­தில்லை. நாளை 10ஆம் தேதி முதல் எந்­த­வொரு முகா­முக்­கும் நேர­டி­யா­கச் சென்று தடுப்­பூ­சி­யைப் போட்­டுக் கொள்­ள­லாம் என்று மத்­திய சுகா­தார அமைச்சு கூறி­யுள்­ளது.

டெல்லி, கர்நாடகாவில் இன்று முழு நேர ஊரடங்கு அமலாகிறது. ஒடிசா, ஆந்திராவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள தாக தகவல்கள் கூறின.

150 கோடி மக்களுக்கு தடுப்பூசி

நாடு முழுவதும் 150 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதன்மூலம், அதிக உயிர்பலி ஏற்படாமல் தடுக்கப் பட்டிருப்பதாகவும் இந்திய வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் எட்டப்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடந்து வந்தாலும் மக்கள் கொரோனா கால பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பது முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தடுப்பூசி இயக்கத்தை சாத்தியமாக்கிய மருத்துவர்கள், அறிவியல் நிபுணர்கள், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!