கொரோனா 3வது அலை அதிவேகமாகக் கிளம்புகிறது

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா தொற்று மூன்­றா­வது அலை தாறு­மா­றாக அதி­க­ரிப்­ப­தால் தமி­ழ­கம் உள்­ளிட்ட பல மாநி­லங்­களி­லும் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நடப்­புக்கு வந்­துள்­ளன.

ஒரே நாளில் புதி­தாக 159,632 பேருக்கு கொரோனா கிருமி தொற்­றி­ய­தாக நேற்று மத்திய அர­சாங்­கம் அறி­வித்­தது. ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்றும் கூடி வரு­கிறது.

இது­வரை ஓமிக்­ரா­னால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்கை 3,623 ஆக உயர்ந்­துள்­ள­தாக மத்­திய சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

புதி­தாக 327 பேர் மாண்­டு­பிட்­ட­தா­க­வும் அதனையடுத்து மொத்த மரண எண்­ணிக்கை 483,790 ஆகக் கூடி­விட்­ட­தா­க­வும் அதி­கா­ர­பூர்வ தக­வல்­கள் தெரிவித்­தன.

தொற்று அதி­க­மாக இருக்­கும் மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் இன்று முதல் நீச்­சல்குளங்­கள், உடற்­பயிற்சி நிலை­யங்­கள் மூடப்­ப­டு­ம்.

கல்­லூ­ரி­களும் பள்­ளி­களும் பிப்­ர­வரி 15ஆம் தேதி வரை மூடப்­பட்டு இருக்­கும். முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் மட்­டுமே தனி­யார் அலு­வ­ல­கங்­க­ளுக்­குச் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள் என்று அந்த மாநில நிர்­வா­கம் தெரி­வித்து உள்­ளது.

குஜ­ராத் உள்­ளிட்ட பல்­வேறு மாநி­லங்­களில் இர­வு­நேர ஊர­டங்கு நடப்­பில் உள்­ளது. சுகா­தா­ரப் பரா மரிப்பு ஊழி­யர்­க­ளுக்கு விடு­முறை கள் ரத்து செய்­யப்­பட்டு உள்­ளன.

தமிழ்­நாட்­டில் நேற்று முழு ஊர­டங்கு நடப்­பில் இருந்­தது.

இந்­நி­லை­யில், பிர­த­மர் நரேந்­திர மோடி நேற்று கொவிட்-19 சூழ்­நிலையை மறு­ப­ரி­சீ­லனை செய்­வதற்­காக முக்­கிய மெய்நிகர் கூட்­டத்­திற்­குத் தலைமை தாங்­கினார்.

இவ்­வே­ளை­யில், நாடு முழு­வ­தும் தடுப்­பூசி இயக்­கம் வேகப்­படுத்­தப்­பட்டு இருக்­கிறது. 15 முதல் 18 வரை வய­துள்ள இளையருக்குத் தடுப்­பூசி போடும் செயல்­திட்­டம் சில நாள்­க­ளுக்கு முன் தொடங்­கி­யது. அதற்­குள்­ளா­கவே 20 மில்லி­யன் பதின்ம வயதினருக்குத் தடுப்­பூசி போடப்­பட்­டு­விட்­ட­தாக அதி­கா­ரி­கள் நேற்று தெரி­வித்­த­னர்.

தலை­ந­கர் புது­டெல்­லி­யில் கிருமித்தொற்று அதி­க­மாக இருக்­கிறது. அன்­றாடத் தொற்று எண்­ணிக்கை 20,000ஐ எட்­டி­வி­டக் கூடும் என்று முதல்­வர் கெஜ்­ரி­வால் தெரி­வித்து இருந்­தார். இந்­நி­லை­யில், நாட்­டில் முதியோர், முன்­க­ளப் பணி­யா­ளர்­களுக்குக் காப்­பூசி (பூஸ்­டர்) போடும் செயல்­திட்­டம் இன்று தொடங்­கு­வ­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

நாட்­டில் 60க்கும் அதிக வய­துள்­ள­வர்­கள் 137.5 மில்­லி­யன் பேர் என்று கணக்­கி­டப்­பட்டு உள்­ளது.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வில் விரை­வில் கொரோனா தொற்று உச்­சத்தை எட்­டி­வி­டும் என்­றும் அதே வேகத்­தில் தொற்று குறை­யத் தொடங்­கும் என்­றும் தேசிய சுகா­தா­ரத் துறை வல்­லு­நர்­கள் முன்­னு­ரைக்­கி­றார்­கள்.

ஒரேநாளில் 159,632 பேர் பாதிப்பு; 3,623 பேருக்கு ஓமிக்ரான்; மாநிலங்களில் கட்டுப்பாடுகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!