இந்தியாவிடமிருந்து பிரமோஸ் ஏவுகணையை வாங்கும் பிலிப்பீன்ஸ்

பிலிப்பீன்ஸ், $375 மில்லியன் அமெரிக்க டாலர் (505 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) செலவில் பிரமோஸ் ஏவுகணையை இந்தியாவிடமிருந்து வாங்கவுள்ளது.

இந்திய அரசாங்கத்துடன் அதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது என்று பிலிப்பீன்சின் தற்காப்பு அமைச்சர் டெல்ஃபின் லொரேன்ஸா கூறினார்.

ஒப்பந்தத்தின்கீழ், பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம், ஏவுகனையுடன் மூன்று மின்கலன்கள், கட்டமைப்பு நிபுணர்கள், ஆகியவற்றை வழங்கி, தளவாட உதவியையும் வழங்கும்.

திரு லொரேன்ஸா இதை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாக நடத்தும் பிரமோஸ் நிறுவனம், அந்த ஏவுகணையை உருவாக்கியுள்ளது.

உலகிலேயே வேகமான ஏவுகணை அது என்று கூறப்படுகிறது.

அந்த ஏவுகணையை வாங்கும் முதல் நாடு பிலிப்பீன்சாக இருக்கும்.

இந்திய தற்காப்பு அமைச்சு ஒப்பந்தம் பற்றி கருத்துரைக்க மறுத்துவிட்டது.

கரையிலிருந்து கப்பல்களைத் தாக்கும் அந்த ஏவுகணைக் கட்டமைப்பு அதன் கடற்படையை மேம்படுத்த உதவும் என்று பிலிப்பீன்ஸ் நம்புகிறது.

370 கிலோமீட்டர் நீளமுள்ள அந்நாட்டின் பிரத்தியேக பொருளில் கடல் வட்டாரத்தில் வெளிநாட்டுக் கப்பல்கள் நுழைவதைத் தடுக்க அந்த ஏவுகணை உதவும் என்று திரு ரொரேன்ஸோ கூறினார்.

பிலிப்பீன்ஸ் 5 பில்லியன் டாலர் (6.74 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) செலவில் அதன் ராணுவத்துக்கு புதிய ஆயுதங்களையும் இயந்திரங்களையும் வாங்கும் ஐந்து ஆண்டு திட்டத்தை மேற்கொண்டுள்ளது.

தென் சீனக் கடலின் பல பகுதிகளை சீனா, புருணை, மலேசியா, வியட்னாம் உள்ளிட்ட நாடுகள் சொந்தம் கொண்டாடும் வேளையில் சீனக் கப்பல்களின் ஊடுருவல்கள் தொடர்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!