வடஇந்தியாவை வாட்டும் குளிர், பனிப்பொழிவு

வடஇந்தியாவை வாட்டும் குளிர், பனிப்பொழிவு

2 mins read
409f94b7-9b67-49f7-964b-edb330d7f03c
இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிம்லா நகரில் இந்த ஆண்டும் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. அதனால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இப்போது குறைவாகவே உள்ளது. படம்: ஊடகம் -

புது­டெல்லி: வடஇந்­தி­யா­வில் பல்­வேறு மாநி­லங்­களில் கடுங்­கு­ளி­ரும் பனிப்­பொ­ழி­வும் நிலவி வரு­கிறது. இத­னால் மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இமாச்­ச­லப் பிர­தே­சத்­தில் கடந்த சில தினங்­க­ளாக நீடித்து வரும் பனிப்­பொ­ழிவு கார­ண­மாக அங்கு முக்­கிய சாலை­கள் பல­வும் மூடப்­பட்­டுள்­ளன. பல இடங்­களில் மின்சாரம், நீர் விநி­யோ­கம் தடை­பட்­டுள்­ளது.

டெல்லி, பஞ்­சாப், உத்­த­ரப் பிர­தே­சம், மத்­தி­யப் பிர­தே­சம் உள்­ளிட்ட வட மாநி­லங்­களில் அடுத்த சில தினங்­க­ளுக்கு குளிர் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் முன்­ன­றி­வித்­துள்­ளது.

மேலும், ஜம்மு காஷ்­மீ­ரின் லடாக் உள்­ளிட்ட பகு­தி­கள், உத்­த­ர­காண்ட், இமாச்­ச­லப் பிர­தே­சத்­தில் இன்று கன­மழை அல்­லது கடும் பனிப்­பொ­ழி­வுக்கு வாய்ப்­புள்­ள­தா­க­வும் அம்­மை­யம் கூறி­யுள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்­கிமை முதல் இமாச்­ச­லப் பிர­தே­சத்­தில் நீடித்து வரும் பனிப்­பொ­ழி­வால் அங்கு நான்கு தேசிய நெடுஞ்­சா­லை­கள் மூடப்­பட்­டுள்­ளன.

மேலும், மாநி­லத்­துக்­குள் 731 சாலை­கள் மூடப்­பட்­டுள்­ள­தா­க­வும் தடை­பட்­டுள்ள மின்சாரம், நீர் விநி­யோ­கத்­தைச் சீர­மைக்க தீவிர நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­க­வும் மாநில பேரி­டர் மேலாண்மை ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, பனிப்­பொ­ழி­வுக்கு மத்­தி­யில் கங்ரா பகு­தி­யில் மலை­யேற்­றத்­தில் ஈடு­பட்ட பதின்ம வயது மாண­வர்­கள் நால்­வ­ரில் இரண்டு பேர் இறந்த நிலை­யில் மீட்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்நிலையில், டெல்லி­யில் நேற்று காலை முதல் பனி­மூட்­டம் நில­வி­யது. அதி­க­பட்­ச­மாக 16 டிகிரி செல்­சி­யஸ், குறைந்­த­பட்­ச­மாக 8 டிகிரி செல்­சி­யஸ் வெப்­ப­நிலை பதி­வா­ன­தாக வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தின் கான்­பூர் உள்­ளிட்ட சில நக­ரங்­களில் குளிர்­காற்று வீசும் என்­றும் கிழக்­குப் பகு­தி­யில் அடர்ந்த பனி நில­வும் என்­றும் வானிலை ஆய்வு மையம் மேலும் தெரி­வித்­தது.