கெஜ்­ரி­வால்: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது சாத்தியமே

புது­டெல்லி: இந்­தி­யத் தலை­ந­கர் டெல்­லி­யில் கொவிட் கொள்­ளை­நோய் தொற்று பாதிப்பு குறைந்து வரு­வ­தால் அங்கு கட்­டுப்­பா­டு­கள் நீக்­கப்­ப­ட­லாம் என்று முதல்­வர் அர்­விந்த் கெஜ்­ரி­வால் தெரி­வித்­துள்­ளார்.

நேற்­றைய நில­வ­ரப்­படி, டெல்லி­யின் தொற்று விகி­தம் 10 விழுக்­கா­டாக இருக்­கக்­கூ­டும் என்­றார் அவர்.

தொற்று விகி­தம் தொட­ர்ந்து குறைந்து வரு­வ­தால் கூடிய விரை­வில் கட்­டுப்­பா­டு­கள் நீக்­கப்­ப­ட­லாம் என்று விளக்­கி­னார்.

இதில் கட்­டுப்­பா­டு­களை நீக்­கும் நோக்­கில் தாமும் துணை ஆளு­நர் அனில் பஜைசாலும் இணைந்து பணி­யாற்ற உள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

முன்­ன­தாக, தலை­ந­கர் டெல்­லி­யில் விதிக்­கப்­பட்­டுள்ள கட்டுப்பாடு­களை நீக்க வேண்­டும் என்ற கோரிக்கையை துணை நிலை ஆளு­நர் நிரா­க­ரித்­தது இங்கு நினை­வு­கூ­ரத்­தக்­கது.

எனி­னும், தனி­யார் அலு­வ­ல­கங்­களில் 50 விழுக்­காடு ஊழி­யர்­கள் பணிக்­குத் திரும்­ப­லாம் என்று அவர் கூறி­யி­ருந்­தார்.

இதற்­கி­டையே, டெல்­லி­யில் தடுப்­பூசி போடு­வது குறித்­துப் பேசிய திரு கெஜ்­ரி­வால், "ெடல்­லி­யில் 100 விழுக்­காடு மக்­கள் முதல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர், 82 விழுக்­காட்­டி­னர் இரண்­டா­வது தடுப்­பூ­சி­யை­யும் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்," என்று சொன்­னார்.

இந்­நி­லை­யில், கொவிட் கொள்­ளை­நோய் தொடர்­பான நடை­மு­றை­களை பின்­பற்­றும்­படி அவர் மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.

"கொரோனா தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­தால், கட்­டுப்­பா­டு­கள் மீண்­டும் விதிக்­கப்­படும்.

"இத­னால் மக்­கள்­தான் பாதிக்­கப்­ப­டு­வர். எங்­கள் மீது நம்­பிக்கை வையுங்­கள், தேவை­யான கட்­டுப்­பா­டு­க­ளையே நாங்­கள் விதிப்­போம்," என்­றார் டெல்லி முதல்­வர் கெஜ்­ரி­வால்.

"சென்ற வாரம் நான் டெல்லி வர்த்­த­கர்­களை சந்­தித்­தேன். அவர்­கள் விருப்பப்படி ஒற்­றைப்­படை, இரட்­டைப்­படை அடிப்­ப­டை­யி­லான ஊர­டங்கை நீக்­கும்­படி தாம் கேட்­டுக்­கொண்­ட­தா­க­வும் அதற்கு அவர் ஒப்­பு­தல் வழங்க மறுத்­து­விட்­ட­தா­கவும் கூறிய திரு கெஜ்­ரி­வால், துணை நிலை ஆளு­நர் மக்­க­ளின் சுகா­தா­ரம் குறித்து கவ­லைப்­ப­டு­வ­தா­கக் கூறி­னார்.

முன்­ன­தாக, திங்­கள்­கி­ழமை டெல்­லி­யில் 5,760 தொற்று சம்­ப­வங்­கள் ஏற்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது இங்கு நினை­வு­கூ­ரத்

தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!