30 வெளிநாட்டுப் பயண விவரங்களை சேமிக்கும் ‘இ-பாஸ்போர்ட்’ இந்த ஆண்டில் அறிமுகம்

புது­டெல்லி: வெளி­நாடு செல்­வோ­ருக்கு இ-பாஸ்­போர்ட் எனப்­படும் மின்­னி­யல் கடப்­பி­தழ் வழங்­கும் திட்­டம் இந்த ஆண்­டி­லேயே அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் என்று நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் தமது வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்­கை­யை தாக்கல் செய்தபோது அறி வித்தார்.

இந்­தப் புதிய கடப்­பி­தழ் குறித்து வெளி­யு­ற­வுத் துறை உய­ர­தி­கா­ரி­கள் கூறு­கை­யில், "இ-பாஸ்­போர்ட் என்­பது வழக்­க­மான கடப்­பி­த­ழின் பின்­பக்­கத்­தில் 64 'கிலோ­பைட்' அளவு தக­வல்­களை சேமிக்­கக் கூடிய 'சிப்' பொருத்­தப்­பட்­டி­ருக்­கும்.

"கடப்­பி­தழ் வைத்­தி­ருப்­ப­வர் குறித்த வழக்­க­மான தக­வல்­க­ளு­டன் கடைசி 30 வெளி­நாட்­டுப் பய­ணம் தொடர்­பான தக­வல்­களும் இந்த 'சிப்'பில் சேமிக்­கப்­பட்­டி­ருக்­கும்.

அத­னால் இந்த கடப்­பி­த­ழில் மோசடி செய்ய முடி­யாது. போலி கடப்­பி­தழ் தயா­ரிப்­பது ஒழிக்­கப்­படும். ஆள்­மா­றாட்­ட­மும் செய்ய முடி­யாது.

"விமான நிலை­யங்­களில் கடப்­பி­தழ் சரி­பார்ப்­பிற்­கான காத்­தி­ருப்பு நேரம் வெகு­வா­கக் குறை­யும். முழுக்க முழுக்க பாது­காப்­பான இந்த மின்­னி­யல் கடப்­பி­தழ் மகா­ராஷ்­டிர மாநி­லம் நாசிக்­கில் உள்ள அரசு அச்­ச­கத்­தில் தயா­ரிக்­கப்­படும்.

"உல­கின் 120 நாடு­க­ளுக்கு மேல் மின்­னி­யல் கடப்­பி­த­ழைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றன," என்று கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!